மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் ஜி பி முத்துவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் முடிவுக்கு வர இருக்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜி பி முத்து!!… வெளியான கலகலப்பான புரோமோ வீடியோ வைரல்.!

அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது முதல் போட்டியாளராக நுழைந்து இரண்டு வாரங்களிலேயே தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தானாக முன்வந்து அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.