தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகி திரைப்படம் குறித்து பார்க்கலாம் வாங்க

Big Project in Dhanush Carrier : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக பல திரைப்படங்கள் உருவாக உள்ளன. இறுதியாக வெளியான தகவலை ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது தான் - என்ன படம்? எவ்வளவு பட்ஜெட் தெரியுமா?
அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் : சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என 3 படம் உருவாக உள்ளது. ‌‌ மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படி கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி விஜய் “JAMESBOND” பாணி படத்தில் நடிப்பாரா..?? போட்டி போடும் இயக்குனர்கள்..! | Latest News | HD

இந்த படம்தான் தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக கூறப்படுகிறது. படத்திற்கு ரூபாய் 120 கோடி பட்ஜெட் செலவிட தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் இது தனுஷின் திரைப்பயணத்தில் மிக பிரமாண்ட படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.