Big boss season 3 is not postponed | Kamal Haasan | Vijay TV | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss 3 Tamil
Big boss season 3 is not postponed

Big boss season 3 is not postponed

உலக கோப்பையால் பிக் பாஸ் சீசன் 3 தள்ளிபோவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியாகி வைரலாக பரவியது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவரே? – விஜய் டிவி தரப்பில் கசிந்த தகவல்.!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினியும் இரண்டாவதாக ஜாங்கிரி மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி உலக கோப்பையால் தள்ளிபோவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியாகி வைரலாக பரவியது.

தமிழ் பிக் பாஸில் கலந்து கொள்ள நான் ரெடி – அஜித் பட நடிகர் அதிரடி பேச்சு.!

ஆனால் அதை பிக் பாஸ் குழுவினர் மறுத்துள்ளனர். மேலும் ஜூன் இரண்டாம் வாரத்திலேயே இந்நிகழ்ச்சி தொடங்கிவிடும் எனவும் அறிவித்துள்ளனர்.