பிக் பாஸ் கவின் தன்னுடைய அடுத்த படம் பற்றி மகிழ்ச்சியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் கவின்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து லிஃப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது படத்தில் அனிருத் பாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை, ஆனால் தற்போது அவர் என்னுடைய படத்திற்கு இசையமைக்கிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் பற்றி பேசுகையில் மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.