Bigg Boss 3 from june Second week | Kollywood | Tamil Cinema | Kamal Haasan | Bigg boss 3 Tamil | Vijay Television | Bigg boss 3 Tamil

Big Boss 3 from june Second week :

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஜுன் 23-ம் தேதி துவங்கும் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியாகி வைரலாக பரவியது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

என்.ஜி.கே குறித்த சூப்பர் அப்டேட்டை சொன்ன செல்வராகவன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினியும் இரண்டாவதாக ஜாங்கிரி மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி வரும் ஜுன் 23-ம் தேதி துவங்கும் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியாகி வைரலாக பரவியது.

ஆனால் அதை பிக் பாஸ் குழுவினர் மறுத்துள்ளனர். மேலும் ஜூன் இரண்டாம் வாரத்திலேயே இந்நிகழ்ச்சி தொடங்கிவிடும் என அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.