Bhuvneshwar Kumar Ruled out of next 3 games, Sports News, Latest Sports News, World Cup 2019, ICC World Cup 2019

Bhuvneshwar Kumar :

காயம் காரணமாக அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் புவனேஷ்வர் பங்கேற்கமாட்டார்.

இவர் காயத்தில் இருந்து மீண்டு, விரைவில் அணிக்கு திரும்புவார்,” என, இந்திய அணி கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, 89 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இப்போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 2.4 ஓவர் வீசிய நிலையில் இடது கால் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார்.

இவர், அடுத்த மூன்று போட்டிகளில் அதாவது வரும் ஜூன் 22ல் ஆப்கானிஸ்தான், ஜூன் 27ல் விண்டீஸ்,

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

ஜூன் 30ல் இங்கிலாந்து ஆகிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோலி கூறியது: தொடையின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் புவனேஷ்வர் குமார், அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட மாட்டார்.

முக்கிய வீரரான இவரது பங்களிப்பு அணிக்கு தேவைப்படுகிறது. இவர், விரைவில் காயத்தில் இருந்து மீண்டு, போட்டியில் பங்கேற்பார். இவருக்கு பதிலாக முகமது ஷமி விளையாடுவார்.

மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் ‘பேட்டிங்’ சிறப்பாக இருந்தது. இவருக்கு, லோகேஷ் ராகுல் ஒத்துழைப்பு தந்த விதம் பாராட்டுக்குரியது.

‘சுழலில்’ குல்தீப் யாதவ் நம்பிக்கை அளித்தார். பாபர் ஆஸம், பகார் ஜமான் என, 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

என இந்திய அணியின் பந்து வீச்சை புகழ்ந்தார் இந்திய அணி கேப்டன் கோலி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.