ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான பூமிகா படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம் வாங்க.

Bhumika Movie Review : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நட்பை மற்றும் விஜய் டிவியில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் பூமிகா.

ஆர் ரத்தின்ரன் பிரசாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவந்திகா, பாவேல் நவகீதன், விது என பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பத்து வருடமாக பூட்டிகிடக்கும் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போகிறது. இதனால் அந்த வீட்டிற்கு சிக்கிக் கொண்ட இவர்கள் அங்கிருந்து எப்படி வெளியேறுகிறார்கள்? இதற்கிடையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பூமிகா படம் எப்படி இருக்கு?? விமர்சனம்.!!

படம் பற்றிய அலசல் :

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒத்த ஆளாக ஒட்டு மொத்த கதையையும் சுமக்கிறார். அவருக்கு அடுத்ததாக அவந்திகா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்ற நடிகர்-நடிகைகள் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

இந்த படத்திற்கு பெரிய பலம் இசை தான்.

ஒளிப்பதிவு :

படத்தின் ஒளிப்பதிவு அற்புதம். எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

ஒரு த்ரில்லர் கதையை கையில் எடுத்து அதனை சமூக கருத்தோடு சேர்த்து இயக்கியுள்ளார் இயக்குனர்.

தம்ப்ஸ் அப் :

1. கதைக்களம்

2. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. இரண்டாம் பகுதி

2. லாஜிக்கல் தவறுகள்