பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய சீசனில் போட்டியாளராக ஜில்லுனு ஒரு காதல் பூமிகா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Bhumika Chwala in Bigg Boss : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா சாவ்லா. ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார் பூமிகா.

பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய சீசனில் ஜில்லுனு ஒரு காதல் பூமிகா?? அவரே வெளியிட்ட தகவல்

தற்போது இவர் அடுத்ததாக இந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 14ல் பங்கேற்க இருப்பதாக தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் பலரும் பூமிகா விட இது குறித்து கேள்வி எழுப்பினர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னை யாரும் அழைக்கவில்லை. ஒருவேளை என்னை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தாலும் பங்கேற்பதில் எனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.