
விஜய் நடித்த படம் இயக்க நோ சொன்னதாக ஓபனாக பேசியுள்ளார் பாரதிராஜா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். வாரிசு நடிகராக திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல எதிர்மறை விமர்சனங்களை தாண்டி தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் விஜயை ஹீரோவாக்க முயற்சி செய்தபோது பாரதி ராஜாவிடம் சென்று விஜய் வைத்து படம் இயக்குனர் கேட்டுள்ளார்.

ஆனால் அப்போது நான் நோ சொல்லிவிட்டேன் என பாரதிராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய்யின் உருவத்தை பார்த்து அவர்கள் ஹீரோவாக வேண்டும் என எனக்கு தோணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக விஜய் இருக்கிறார். அவருடைய வளர்ச்சி ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
