Bharathi Raja Wishes to Vijay
Bharathi Raja Wishes to Vijay

தளபதி விஜய்க்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் மாபெரும் இயக்குனரான பாரதிராஜா.

Bharathi Raja Wishes to Vijay : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. இவர் இயக்கிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி மதிப்பும் வரவேற்பும் உண்டு.

நேற்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் விஜய்யை இயக்க முடியாமல் போனது குறித்து வருத்தப்பட்டுள்ளார். அதாவது என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாப்படும் விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பொத்தி பொத்தி வச்சதை போட்டுடைத்த முக்கிய பிரபலம் – ஜகமே தந்திரம் படத்தின் கதை இது தான்!

காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி, நக்கலுக்கான
அந்த , உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்
அன்புடன்
பாரதிராஜா

HBDTHALAPATHYVijay என பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு ஏக்கம் இருக்கிறதா? இங்க நினைத்தால் இப்போது கூட விஜய்யை இயக்கலாம் இந்த கூட்டணிக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி வருகின்றனர்.

https://twitter.com/Senthil75807964/status/1275119525776654336?s=19