Bharathi Raja Wishes to Natty Natraj

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு அதில் நடித்த நடிகருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

Bharathi Raja Wishes to Natty Natraj : தமிழ் சினிமாவின் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருந்த இந்த படத்தில் நட்டி நட்ராஜ் வில்லனாக நடித்து இருப்பார். மேலும் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்க லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பிற்கு அடுத்ததாக நட்டி நட்ராஜின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அது படம் என்பதை மறந்து பலரும் நட்டி நடராஜ் உண்மையாகவே திட்டி தீர்த்தனர். அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா அவருக்கு போன் செய்து என்ன நடிப்புடா, பாடி லாங்குவேஜ் எல்லாம் சூப்பர். அசத்திட்டடா, நீ multi-talented பர்சன் என புகழ்ந்து தள்ளியுள்ளார். இதனை நட்டி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.