Bharathi Kannamma Venba Reply to Fans

பாரதி கண்ணம்மா ரொமான்ஸ் தொல்லை தாங்கல சீக்கிரம் வாங்க என கமெண்ட் பதிவு செய்த ரசிகர்களுக்கு வெண்பா பதில் கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Venba Reply to Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக சிறிது காலம் சீரியலில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்காக அவர் ஜெயிலுக்குப் போவது போல காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குழந்தை பெற்று ஒரு மாதமான நிலையில் தற்போது மீண்டும் சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதேசமயம் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

பத்திரிகையாளருக்கு நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

இதனால் சீரியல் ஓரளவிற்கு கலகலப்பாக சென்று கொண்டிருந்தாலும் முரட்டு சிங்கிள்கள் இவர்களின் ரொமான்ஸ் தொல்லை தாங்கல இவர்களை பிடிக்க வெண்பா சீக்கிரம் வாங்க என கமெண்ட் அடித்துள்ளனர். இதனைப் பார்த்த பரினா சீக்கிரம் வந்திடுறேன் என கமெண்ட் அடித்துள்ளார்.

இவருடைய இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.