ஒருவழியாக பாரதிகண்ணம்மா வெண்பா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

Bharathi Kannamma Venba in Shop Opening : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வேடத்தில் நடித்து வருபவர் பரீனா. இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

அப்போது வில்லியா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். மக்கள் எல்லோரும் திட்டுறாங்க. அதைவிட இல்லையா நடிப்பவர்களை கடை திறப்பு விழாவுக்கு கூட கூப்பிடுவது இல்லை என புலம்பினார்.

இவரது புலம்பலை தொடர்ந்து தற்போது முதல் முறையாக கடை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஒரு வழியா கடை திறப்பு விழா ஒன்றில் என்னை கூப்பிட்டு விட்டாங்க என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.