வெண்பா கொடுத்த மாத்திரையால் அஞ்சலிக்கு மூச்சு விட முடியாமல் பிரச்சினை ஏற்படுகிறது.

Bharathi Kannamma Update 26.08.21 : தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு செய்து வைத்து அழகு பார்க்க அவருடைய பெற்றோர் முடிவு செய்து அது குறித்து கலந்து பேசுகின்றனர். அதற்காக அஞ்சலியின் அம்மா 4, 5 வருடமாக சீட்டு போட்டு பணம் சேர்த்து வைத்திருப்பதாக கூறுகிறார். அஞ்சலியின் அப்பா நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம வீட்ல நடக்குற நல்ல விஷயம் கண்டிப்பாக கண்ணம்மாவை கூப்பிடனும் என கூற முதலில் வேண்டாம் என சொல்லும் அஞ்சலியின் அம்மா பிறகு ஒருவழியாக ஒப்புக்கொள்கிறார்.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

வெண்பா கொடுத்த மாத்திரையால் வந்த வினை, மருத்துவமனைக்கு செல்லும் கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து சௌந்தர்யா வீட்டுக்கு சென்று இது குறித்து பேசி அவர்களிடமும் சம்மதம் வாங்குகின்றனர். இன்னொரு புறம் என்றால் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட அஞ்சலிக்கு மூச்சு விட முடியாமல் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் அவர் வெண்பாவுக்கு போன் செய்து இருக்கும் பிரச்சினையை கூறுகிறார்.

வெண்பா மாத்திரையால ஒரு பிரச்சனையும் இல்ல உனக்குள்ள ஏற்கனவே இருக்க பிரச்சனை தான் காரணம் எனக்கூறி மூச்சுப் பயிற்சி கொடுக்கிறார். உன் மூச்சே போக போகுது மூச்சுவிட கஷ்டப்படுறியா என வெண்பா மனதளவில் சிரித்து கொள்கிறார்.

லட்சுமி ஒருபுறம் பாரதி அங்கிள் முன்னை மாதிரி பேசுறது இல்ல, ஏன் இப்படி நடந்திருக்கிறாரு. அவருக்கு என்னாச்சு என யோசிக்கிறார் லட்சுமி.

கண்ணம்மா வீட்டில் ஹேமா ஷார்ப்நர் இல்லாமல் பிளேடு வேண்டும் என கேட்கிறார். கண்ணம்மா அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி ஆட்டோ டிரைவருடன் அனுப்பி தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்குமாறு கூறுகிறார். இருவரும் வெளியில் கிளம்பி விட தன் அம்மாவிற்கு பழையபடி தலைச்சுற்றல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

மருத்துவமனைக்குச் செல்லும் கண்ணம்மாவை பரிசோதித்த மருத்துவர் உனக்கு இரட்டை குழந்தையாச்சே, குழந்தைங்க எப்படி இருக்காங்க என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். எனக்கு ஒரு குழந்தை தானே என கண்ணம்மா கூற இல்ல உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தது நான் தான் ரெண்டு குழந்தை என கூறுகிறார். இதையடுத்து கண்ணம்மா தன்னுடைய மாமியார் சௌந்தர்யாவுக்கு போன் செய்து கேட்பது போன்ற காட்சி வெளியான ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.