லட்சுமியிடம் உங்க அப்பா யாரு இதுவரைக்கும் நீ பார்த்திருக்கிறாயா என பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Bharathi Kannamma Update 24.08.21 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டிலிருக்கும் லட்சுமிக்கு கண்ணம்மாவின் அப்பா சாக்லேட் வாங்கி கொடுக்க அதை வாங்க மறுக்கிறார் லட்சுமி. நீங்க யாரு கேக்க நான் உன்னுடைய தாத்தா என கூறுகிறார்.

இறுதிப்போட்டியில் அசத்தல் : சாம்பியன் கோப்பை வென்றார் ‘டென்னிஸ் சூறாவளி’ ஆஷ்லி பார்டி

நீங்க என்னோட தாத்தா வா என லட்சுமி கேட்க எங்களை நீ என்னென்ன கூப்பிடுவ பதிலுக்கு கேட்க தாத்தா பாட்டி என கூறுகிறார் லட்சுமி. அஞ்சலியை என்னன்னு கூப்பிடுவ சித்தி என்று சொல்ல அப்போ அஞ்சலியோட அப்பா நான் என்ன வேணும் உனக்கு எனக் கேட்கிறார். அதற்கு லட்சுமி தாத்தா என கூறுகிறார்.

உங்க அப்பா யாரு..? லட்சுமியிடம் பாரதி கேட்ட கேள்வி, அஞ்சலிக்கு எமனான வெண்பா - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

அதன் பிறகு சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் கண்ணம்மாவின் அப்பாவை தாத்தா என்று கூறும்படி லட்சுமியிடம் கூறுகின்றனர். அதற்கு அவர் அவளைக் கட்டாயப் படுத்த வேண்டாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது லட்சுமி தாத்தா என கூற அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப் படுத்துகிறார்.

பின்னர் பாரதி லட்சுமியிடம் கத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார். அதன் பின்னர் லட்சுமி நீங்க ஏன் வீட்ல எல்லார்கிட்டயும் கோவ படுறீங்க கோபப்பட்ட ரத்தம் சுடு தண்ணி மாதிரி கொதிக்கும் எனக்கூற பாரதி இனிமே அப்படி நடக்காமல் பார்த்து இருக்கிறேன் என கூறுகிறார்.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

அதன் பின்னர் ஹேமா ஓட அம்மா யாரு நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என கேட்கிறார். உன்னுடைய அப்பா யாரு எனக் கேட்கிறார். நான் என் அப்பாவைப் பார்த்தது இல்லையா என் அம்மா கிட்ட கேட்டாலும் துபாய்ல இருக்காரு வரப்ப பார்த்துக்கோ என கூறி விடுவார். இதுவரைக்கும் நான் போன்ற கூட பேசியதில்லை என்று லட்சுமி கூறுகிறார்.

இன்னொருபுறம் அஞ்சலியை பார்க்க வந்த என்பா அஞ்சலியை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதற்கான மருந்து மாத்திரையை எழுதிய சீட்டைக் கொடுக்கிறார். மேலும் இது பாரதி எழுதி கொடுத்தது என கூறுகிறார். உனக்கு இருக்க பிரச்சினையை வேறு ஒருவருக்கு இருக்கிற மாதிரி சொல்லி இதை எழுதி வாங்கி வந்தேன் என வெண்பா கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.