சௌந்தர்யாவை பாரதி திட்ட, லஷ்மியை கண்ணம்மா திட்டி தீர்த்துள்ளார்.

Bharathi Kannamma Update 09.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சீமந்த முடிந்த பின்னர் அஞ்சலியை விட்டு வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு கிளம்ப முயற்சிக்கிறார். வாழப்போவது இன்னும் கொஞ்ச நாள் தான் சாகும் வரை உன் கூடவே இருக்கணும் என நினைத்துக்கொண்டு அஞ்சலி நான் உன்னோட வந்துடரேன் என கதறி அழுகிறார். ‌‌

திருமண முறிவு : ஷிகர் தவானை பிரிகிறார் மனைவி..வைரல் பதிவு

அஞ்சலியை அழுவதைப் பார்த்த அவருடைய பெற்றோர் அவரை அகில் உடன் அனுப்பி வைத்துவிடுகின்றனர். பெண்பாவை காப்பாற்றி விட்டு வீட்டுக்கு வந்த பாரதி தன்னுடைய அம்மா சௌந்தர்யா திட்டம்போட்டு கண்ணம்மாவை வர வைத்ததாக அவரிடம் சண்டையிடுகிறார். பெண்பாவை எப்படி அசிங்கப்படுத்தலாம்? நீங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல என்கிற உண்மையை அஞ்சலியை வைத்து போட்டு உடைச்சுட்டிங்களா என சண்டை போடுகிறார்.

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch

அதேபோல் லஷ்மி அந்தப் புகைப்படத்தைப் பார்த்து உனக்கு சீமந்தம் நடந்துச்சாமா? யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க எனக் கேட்க கோபமான கண்ணம்மா நீ பக்கத்துல இருக்க அம்மா நான் வேணா இல்லாதவங்களை எல்லாம் கேட்கிற என சரமாரியாக திட்ட லஷ்மி நான் சாதாரணமா தான் கேட்டேன். இனி உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன் போமா என சென்று விடுகிறார்.

அகிலும் அஞ்சலியும் பிறக்க போற குழந்தையை எப்படி வளர்கணும்? என்னவாகணும்னு நினைக்கிற என பேசிக் கொள்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.