
பாரதி கண்ணம்மா பற்றி புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் இன்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகிய காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு கண்ணம்மா கர்ப்பமாக இருந்த போது வெண்பா செய்த சூழ்ச்சியால் பாரதி இந்த குழந்தைக்கு நான் அப்பா இல்லை என சொல்லி கண்ணம்மாவை வெளியே அனுப்பிய நிலையில் இன்று வரை பாரதி சந்தேகத்தையும் கைவிடாமல் டிஎன்ஏ டெஸ்ட் செய்யும் எடுக்காமல் தொடர்ந்து சந்தேகப்பட்டு சீரியல் மீதான ஆர்வத்தை குறைத்து சலிப்பை உண்டாக்கி விட்டது.
கடந்த வாரம் கண்ணம்மா ஹேமா தனக்கு பிறந்த பெண் என்ற உண்மையை பாரதியிடம் போட்டுடைத்த நிலையிலும் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் லட்சுமி பேரன்ட்ஸ் மீட்டிங்குக்கு கண்ணம்மா வராததால் பாரதியை வந்து பேச சொல்கிறாள் லட்சுமி.

ஆனால் பாரதி அதெல்லாம் உங்க அப்பாவோ அம்மாவோ தான் வந்து பேசணும் என சொல்ல நீங்க தான் என் அப்பானு எனக்கு எப்பவோ தெரியும் என லட்சுமி கூறுகிறார். இந்த புரோமோ வீடியோவை பார்த்த 90 சதவீத ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ஒரு எண்டு கார்டே இல்லையா கடுப்பாகுது என கமெண்ட் அடித்து உள்ளனர்.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு கதையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதே சீரியலின் தற்போதைய நிலை.