பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகிய காதல் கதையாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் கால போக்கில் அப்படியே எதிர்மறையாக மாறியது.

பாரதி கண்ணம்மா சீரியலை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. சிரிப்பு சிரிப்பா வருது - அப்படி என்ன நடந்துச்சு??

ஒரே ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் ஆனால் அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இயக்குனர் தொடர்ந்து கதையை வேற வேற டிராக்கில் எடுத்துச் சென்று சலிப்பை ஏற்படுத்துகிறார்.

சீரியலை முடிவுக்கு கொண்டு வாங்க என ரசிகர்கள் எத்தனையோ முறை கதறியும் இயக்குனர் நீங்க கதறுங்க, நான் கண்டுக்க மாட்டேன் என இருக்கிறார். இப்படியான நிலையில் தீவிரவாத கும்பலை கண்ட ஒருவன் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள கடைசியில் அவன் கண்ணம்மா மேலையே கை வைக்க அவள் பத்ரகாளியாக பொங்கி எழுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. சிரிப்பு சிரிப்பா வருது - அப்படி என்ன நடந்துச்சு??
P

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலான நிலையில் பெரும்பாலான கமெண்ட்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை என கிண்டல் அடித்த படியே பதிவாகி உள்ளது. எப்போதான் இது சீரியஸாக மாறும் இல்ல எப்போ தான் முடிவுக்கு வரும்? என அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Barathi Kannamma | 12th to 17th September 2022 - Promo