பாரதி கண்ணம்மா பற்றி வெளியான புதிய ப்ரோமோ வீடியோவை கேவலத்தின் உச்சம் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பத்தில் அழகான காதல் கதையாக ஒளிபரப்பாக ரசிகர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றது. பிறகு மனைவியின் கர்ப்பத்தின் மீது சந்தேகம் என டிராக் மாறிய சீரியல் தற்போது வரை சரியான பாதை அறியாமல் தடுமாறி தடம் மாறி ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வாங்க என சொல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் இயக்குனர் கதையை கண்டமேனிக்கு கொண்டு செல்கிறார்.

கண்ணம்மா பாரதியை காப்பாற்றியதால் இருவதும் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் அதுவும் இல்லாமல் வெண்பா ரோகித்தால் கர்ப்பமான நிலையில் அந்த குழந்தைக்கு பாரதியை அப்பாவாக்க முயற்சி செய்ய அதற்காக திட்டம் போட்டு விஷம் குடித்த நிலையில் பாரதி அவளை காப்பாற்ற என்னை எதுக்கு காப்பாற்றின, நான் திரும்பவும் சாக தான் போறேன் என சொல்ல பாரதி உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என வாக்கு கொடுப்பது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

உனக்கு பொறந்த குழந்தைக்கு அப்பாவாக இருக்க முடியாதுன்னு சொல்ற, ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுக்க மனசு வரல, ஆனா யாரோ பெத்த குழந்தைக்கு அப்பாவாக போறியா? இதெல்லாம் ஒரு சீரியலா என பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இதுக்கெல்லாம் ஒரு எண்டு கார்டே கிடையாதா இயக்குனரே??

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.