அப்பா யாருன்னு சொல்றேன்னு சொன்னியே சொல்லி எனக் கேட்ட லஷ்மிக்கு பாரதி பதிலளித்துள்ளார்.

Bharathi Kannamma Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா தன்னுடைய பிறந்தநாளை லட்சுமியிடம் அப்பா யாரென சொல்வதாக வாக்கு கொடுத்திருந்தார்.

அதனை நிறைவேற்ற பாரதியை தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வருமாறு அவர் கோரிக்கை வைத்திருந்தார். வெண்பா ஒரு ஐடியா சொல்லி பாரதியை இந்த விழாவுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்திருந்தார்.

அதன்படி கண்ணம்மா வீட்டுக்கு வந்த பாரதி லட்சுமியிடம் உனக்கு உங்க அப்பா யாருன்னு தெரியும் அவ்வளவுதான் உனக்கு அம்மா அப்பா எல்லாமே அவங்க தான். உனக்காக அதுங்க வாழ்க்கையையே தியாகம் பண்ணிட்டு இருக்காங்க என சொல்ல லட்சுமி கண்ணம்மாவை பிடித்து அழுகிறார். பாரதி சொன்ன பதிலைக் கேட்டு கண்ணம்மாவும் கண்கலங்கி அழுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.