Bharathi Kannamma Serial trolls

சட்டுனு பிரசவத்தை முடிங்கடா.. எவ்வளவு நாளைக்குத்தான் அந்த புள்ள துணி மூட்டையுடன் சுத்தும் என பாரதிகண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bharathi Kannamma Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் என்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக கொண்டாடப்பட்டு வந்தது.

அதிலும் குறிப்பாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவர் இடையேயான காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து எலியும் பூனையுமாக மாறி உள்ளனர். இருவருக்கும் அடிக்கடி ஆவேசமான முகபாவனையும் காட்சிகளும் அதிகம் இடம் பெறுகின்றன.

நீங்க ரெண்டு பேரும் என்ன வேணா பண்ணுங்க ஆமா கோபப்படுற மாதிரிமட்டும் வேணாம் எங்களால பார்க்க முடியல என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோ கமெண்ட்டுகளில் ரசிகர் ஒருவர் சீக்கிரம் பிரசவத்தை முடிங்கடா.. எவ்வளவு நாளைக்குத்தான் அந்த புள்ளை வயித்துல துணி மூட்டையுடன் சுத்தும் என கிண்டலடித்துள்ளார்.

மேலும் இருவருக்கும் காதல் காட்சிகளை மட்டும் செய்யுங்கள் கோபப்படும் காட்சிகள் வேண்டாம் டைரக்டரே எனவும் ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று வாரம் ஆகவே வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா கையில் ஒரு பையுடன் நடந்து கொண்டே இருப்பதால் நெட்டிசன்கள் தொடர்ந்து விதவிதமான மீம்ஸ் போட்டு சீரியலை பங்கமாக கலாய்த்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டுனு பிரசவத்த முடிங்கடா.. எவ்வளவு நாளைக்கு அந்த புள்ள துணி மூட்டையோடு சுத்தும்?? பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!