எப்படா சீரியல் முடிப்பீங்க என மக்களின் கேள்விக்கு பாரதி கண்ணம்மா டீம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகிய காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

எப்படா சீரியல் முடிப்பீங்க?? மக்களின் கேள்விக்கு பாரதி கண்ணம்மா டீம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வீடியோ அறிவிப்பு

பிறகு பாரதி தன்னுடைய மனைவி கண்ணம்மாவின் கர்ப்பத்தில் சந்தேகப்பட கண்ணம்மா கணவனை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய விஷயங்கள் மக்கள் மத்தியில் இன்னும் வரவேற்பை அதிகரிக்க செய்தது. ஆனால் அதன் பின்னர் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் ஜவ்வு போல் இழுத்து வந்தது மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது.

எப்படா சீரியல் முடிப்பீங்க?? மக்களின் கேள்விக்கு பாரதி கண்ணம்மா டீம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வீடியோ அறிவிப்பு

தற்போது வரை இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என தெரிவித்துள்ளனர்.