ஹேமாவை அழைத்து வரச் சென்ற கண்ணம்மாவுக்கு பாரதி கொடுத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Bharathi Kannamma Serial Episode Update 18.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹேமாவை அழைத்து கொண்டு கோவிலுக்குச் செல்ல சௌந்தர்யா வீட்டிற்குச் செல்கிறார் கண்ணம்மா. சௌந்தர்யா தன்னுடைய கணவருடன் சேர்ந்து கண்ணம்மா குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். முன்னெல்லாம் வீட்டுக்கு வா கண்ணம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பீங்க இப்ப ஏன் வந்த என நினைக்கிறீர்களா என கேட்கிறார்.

சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

எதுக்கு வந்த என சவுந்தர்யா கேட்கிறார். ஹேமாவை கூட்டிட்டு போக வந்தேன் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 4 நாட்கள் டைம் கேட்டு இருந்தோமே என அனைவரும் கூற அந்த பொண்ண கூட்டிட்டு போக எனக்கு கெடு வைக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம் என கூறுகிறார். சவுந்தர்யா நான்தான் என்ன விஷயம் என்பதை உன்கிட்ட முழுசா சொல்லிட்டேன்ல என கூறுகிறார். அதன்பிறகு ஹேமாவை கோவிலுக்கு கூட்டிட்டு போக வந்தேன். அவர் பெயரில் அர்ச்சனை செய்யணும். அதன்பிறகு இங்கேயே கூட்டி வந்து விடுகிறேன் என கூறுகிறார். வேண்டாம் நீ போய்விடு என சௌந்தர்யா கூறுகிறார்.

இந்த நேரத்தில் பாரதியும் ஹேமாவும் மேலே இருந்து கீழே வருகின்றனர். கண்ணம்மாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்கிறார். லஷ்மி வரலையா எனக் கேட்க வந்திருக்கா உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போக வந்தேன் என கூற எனக்கு ஓகே டாடி பர்மிஷன் கொடுக்கணும். டாடி பர்மிஷன் கொடுக்கட்டும் முதல்ல அதெல்லாம் வேண்டாம் என்று சௌந்தர்யா கூறுகிறார். ஒரு வாரம் உங்க பொண்ணு என் வீட்டில் வைத்து பத்திரமாக பார்த்துக் கொண்ட எனக்கு ஒரு மணி நேரம் பார்க்க முடியாத மேடம் என கூறுகிறார் சௌந்தர்யா. அதன் பிறகு ஹேமா பாரதியிடம் கேட்க பாரதி போயிட்டு வா என கூறுகிறார்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! 

பின்னர் லஷ்மி மேலே வருகிறார் இருவரும் கட்டி அணைத்து பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அதன் பிறகு மூவரும் காரில் செல்கின்றனர். கண்ணம்மாவுக்கு முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர். ஹேமாவிடம் கண்ணம்மா நீயும் என் பொண்ணு தான் என கூறுகிறார். நான் உங்க பொண்ணா ஹேமா கேட்கிறார். நீயும் லட்சுமியும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். லட்சுமி எனக்கு பொண்ணுனா நீயும் என் பொண்ணு தான் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் சௌந்தர்யாவும் வேணுவும் என்ன செய்வது என பேசிக் கொள்கின்றனர். அப்போது வேணு கண்ணம்மா ஹேமாவிடம் நான் தான் உன் அம்மானு சொல்லிட்டா.. உண்மையை சொல்லுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு என கூற உடனே சௌந்தர்யா கோவிலுக்கு கிளம்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.