கண்ணம்மா பேயாக மாறி வெண்பாவை மிரட்ட பாரதி சௌந்தர்யாவிடம் ஹேமாவை என்னிடம் இருந்து பிரித்தால் உயிரோடவே இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

Bharathi Kannamma Serial Episode Update 16.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா இன்னும் நான்கே நாளில் ஹேமா தங்களுடன் வந்து சேரப் போவதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி இன்னமும் அவளை என்னிடமிருந்து பிரித்து வைக்க வேண்டாம் என வேண்டுகிறார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

பேயாக மாறிய கண்ணம்மா.. உயிரை விடக் கூட தயங்க மாட்டேன், பாரதி கொடுத்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இந்தப் பக்கம் சௌந்தர்யா வீட்டு கார்டனில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருக்க அந்த நேரத்தில் பாரதி வந்து உங்களிடம் பேச வேண்டும் என கூறுகிறார். அதன்பிறகு சௌந்தர்யா என்னவென்று கேட்க நீங்கதான் என்னை சின்ன வயதில் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என சொல்லி வளர்த்தீர்கள். எது நடந்தாலும் அதனை யதார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள். ஆனால் இன்று நீங்களே என்னிடம் அதிகமாக பொய் சொல்கிறீர்கள். அந்த கண்ணம்மா எதற்கு வந்தா? ஹேமாவை எதற்கு தூக்கி கொஞ்சனும்? கையில எதுக்கு காயம்பட்டுச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். மேலும் அம்மா தன்னிடமிருந்து விலகி கண்ணம்மாவிடம் ஒட்டி கொள்வது போல எனக்கு தோன்றுகிறது. யாருக்காகவும் நான் ஹேமாவை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஒருவேளை ஹேமாவை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என கூறுகிறார். இதனால் சௌந்தர்யா என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைகிறார்.

அந்தப் பக்கம் சாந்தி நான் உங்க பக்கத்தில் படுக்க மாட்டேன் என சாந்தி கூறுகிறார். நேற்று உங்கள் கனவில் கண்ணம்மா தான் வந்தாள். என்னை எட்டி எட்டி உதைச்சீங்க எனக் கூறுகிறார். இதனால் நான் வெளியே படுக்கப் போவதாகக் கூறி விட்டு வெளியே சென்று விடுகிறார் சாந்தி.

Thalaivar ரஜினி Sir Style-ல யாராலும் அடிச்சுக்க முடியாது..! | Annaatthe Teaser | Public Opinion

லைட் ஆப் செய்துவிட்டு படுக்க திடீரென கண்ணம்மா அவர் முன்னாடி நிற்கிறார். பதறிப்போய் எழுகிறார் வெண்பா. லைட் ஆன் பண்ணதும் கண்ணாம்மா மறைகிறார். ஆப் செய்ததும் கண்ணம்மா தெரிகிறார். அவர் கண்ணம்மாவை என்னுடைய பொண்ணு எங்க மறைத்து வைத்திருக்க கேட்டு அடிப்பது போல இருக்கிறது. உடனே சாந்தி ஓடிவந்து என்னம்மா பண்றீங்க என கேட்கிறார். கொசு அடிச்ச மாதிரி சத்தம் கேட்டுச்சு என்ன எது எனக் கேட்க சாந்தி பிடித்து அடி வெளுக்கிறார் வெண்பா.

இந்தப் பக்கம் கண்ணம்மா சவுந்தரிய எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கண்டு லஷ்மியை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு காரில் செல்கிறார். மேலும் நாம நேரா போயிட்டு அம்மாவை கூட்டிட்டு கோவிலுக்கு போகப் போவதாக கூறுகிறார். இதனால் லஷ்மி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.