வெண்பாவை வெளுத்து வாங்க திட்டம் போடுகிறார் கண்ணம்மா.

Bharathi Kannamma Serial Episode Update 15.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. விவாகரத்து பேப்பரில் கண்ணம்மா கையெழுத்து போடாமல் கண்ணம்மா பேசிய விதத்தை எண்ணி ஆப்பிளை குத்திக் கிழித்து யோசித்துக் கொண்டிருக்கிறார் வெண்பா. சாந்தியிடம் நடந்ததை கூறுகிறார்.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

வெண்பாவை வெளுத்து வாங்க திட்டம் போடும் கண்ணம்மா.. பாரதிக்கு வந்த சந்தேகம் - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் சௌந்தர்யா மற்றும் குடும்பத்தார் பாரதியிடம் எப்படி இதை சொல்வது? கண்ணம்மா வந்து போனது அவன் மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கும். வந்ததும் அதைப் பற்றிக் கேட்பான் அதற்கு என்ன பதில் சொல்வது என அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டிற்கு வந்த ஹேமா மற்றும் பாரதி சௌந்தர்யா இது பற்றி கேட்கின்றனர். அதாவது சமையல் அம்மா எங்க நான் ஆசை ஆசையா வந்தேன் எனக் கேட்க அவங்க பொண்ணு லஷ்மி தனியாக இருப்பதால் அவங்க கிளம்பிட்டாங்க என சௌந்தர்யா கூறுகிறார். அதன் பிறகு ஹேமா ரூமுக்கு சென்று விடுகிறார். பின்னர் பாரதி அவ எதுக்கு இங்கே வரணும்? என கேட்க அவருடைய அப்பா எங்களை பார்க்க வந்திருந்தா என கூற அவ உங்கள கண்டுக்கவே இல்லையே ஹேமாவை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கிறா வித்தியாசமா நடந்துக்கிறா என சொல்கிறார். அதன் பின்னர் ஒருவழியாக வெளியே சொல்லி சமாளிக்க பாரதி உள்ளே சென்று விடுகிறார்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..!

கண்ணம்மா லட்சுமியுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஹேமா போன் செய்கிறார். சமையல் அம்மா எதுக்கு நீங்க போயிட்டீங்க நான் ஆசை ஆசையா வந்தேன் என கூறுகிறார். ஒரு அவசர வேலை அதான் கிளம்பிட்டேன் என கூறுகிறார். இனிமே நீ லஷ்மியை அக்கானு தான் கூப்பிடணும் என சொல்கிறார். ரெண்டு பேரும் ஒரே நாள்ல தானே பிறந்தோம் என லக்ஷ்மி ஹேமா என இருவரும் சிரித்துக் கொள்கின்றனர்.

அதன் பிறகு ஒரே நாள்ல பொறந்தாலும் உனக்கு முன்னாடியே லஷ்மி தான் பிறந்தா. நான் சொன்னா கேட்பியா இல்லையா என கூறிவிட்டு இனி லஷ்மியை அக்கானுதான் கூப்பிடுணும் என கூறுகிறார். ஹேமாவும் சரியென சொல்கிறார். பின்னர் ஹேமா லஷ்மி என இருவரும் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ரசிக்கிறார் கண்ணம்மா.

ரெண்டு பொண்ணு இங்க இருக்க வெண்பா என்னுடைய குழந்தையை கடத்தி வச்சிருக்கேனு சொல்றா. அவ ஹேமா என் பொண்ணு தெரிந்து சொல்றாலா? இல்ல சும்மா நான் சொல்றாலா என்பதை அவள் வாயாலேயே தெரிஞ்சிக்கணும். வெண்பாவை சும்மா விடமாட்டேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் ஹேமா சௌந்தர்யா மற்றும் சௌந்தர்யா விட்டனர் என அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க பாரதி வருகிறார். அம்மாவை கிண்டல் செய்கிறார். அதைப் பின்னர் கையில் காயம் இருப்பதைப் பார்த்து என்னாச்சு கண்ணாடி கிழித்தது போல இருக்கே என்ன ஏது என கேட்கிறார். சௌந்தர்யா ஏதோ பதிலை சொல்ல எல்லாம் யார் யாரோ வந்துட்டு போன பிறகு தான் நடந்துள்ளது எனக்கூறி விட்டு எழுந்து செல்கிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.