ஹேமாவிடம் உண்மையை சொல்ல விடாமல் தடுத்து உள்ளார் சௌந்தர்யா. இதனால் கண்ணம்மா அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Bharathi Kannamma Serial Episode Update 13.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்த கண்ணம்மா நேராக பாரதி வீட்டிற்கு செல்கிறார். அங்கே அம்மாவைப் பார்த்ததும் முத்தமழை பொழிந்த இவர் நான் உனக்கு என்ன வேணும் தெரியுமா என கேட்கிறார்.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

ஹேமாவிடம் உண்மையை சொல்ல விடாமல் தடுத்த சௌந்தர்யா.. கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய சீரியல் எபிசோடு அப்டேட்

அனைவரும் என்ன நடக்கப்போகிறது என அதிர்ச்சியுடன் காத்திருக்க ஓடிவந்த சௌந்தர்யா சமையல் அம்மா என உண்மையை சொல்ல வந்த கண்ணம்மாவை தடுக்கிறார். அதன் பின்னர் பாரதி மற்றும் ஹேமாவை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி வைக்கின்றனர். ஹேமா எதுக்கு போகணும் நீங்கதான டாக்டர் நீங்க மட்டும் போங்க என கண்ணம்மா கூறுகிறார். ஹேமாவிடம் நீ போய்த்தான் ஆகணுமா என கேட்கிறார். ஆமாம் சமையல் அம்மா என என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பின்னர் கண்ணம்மாவிற்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது தெரியாமல் இருந்தாலும் மனதிற்குள் அப்படிப்பட்ட சிந்தனை ஓடிக்கொண்டு தான் இருந்தது. டாக்டர் உனக்கு இரட்டைக் குழந்தை பிறந்திருக்கும் என கூறியதும் அந்த சிந்தனை கரையேறி விட்டது. நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு முறை கேட்டிருப்பேன். ஆனால் எல்லோரும் சேர்ந்து உண்மையை மறைத்து எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டீங்க என கூறுகிறார் கண்ணம்மா. ஒவ்வொருவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்.

இந்த பாவத்தை செய்தது நான் மட்டும் தான். இதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என்னமோ நினைத்து உன் குழந்தையை கூட்டிட்டு வந்தேன் ஆனால் என்னென்னமோ நடக்கிறது என சௌந்தர்யா கூறுகிறார். நீங்க குழந்தையை தூக்கிட்டு வரல திருடிட்டு வந்தீங்க என கண்ணம்மா கூறுகிறார். நீ என்ன வேணாலும் சொல்லு என்ன நாலடி வேண்டும்னாலும் அடிச்சிக்க என கூறுகிறார்.

சௌந்தர்யாவை நகர்த்தி விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டு இனி என் பொண்ணு இல்லாம என்னால இருக்க முடியாது. ஹேமா வந்ததும் கூட்டிட்டு தான் போவேன் என கறாராக கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீ வீட்டுக்குப் போ கண்ணம்மா நான் ஹேமாவை கூட்டிட்டு வந்து விடறேன் என சௌந்தர்யா கூறுகிறார். ஆனால் அதற்கும் ஒத்துப்போகவில்லை கண்ணம்மா.

மறைக்கப்பட்ட நிறைய விஷயங்களை இந்த படம் மூலம் கொண்டு வருவோம்

நீ நினைக்கிற மாதிரி உடனே ஹேமாவை கூட்டிட்டு போக முடியாது. பாரதி அவ மேல அவ்வளவு அளவு கடந்த அன்பை வச்சிருக்கான். ஹேமாவை கூட்டிட்டு போனா அவன் உடைஞ்சு போய் விடுவான். அவன் அதுக்கு அப்புறம் எப்படி நடந்துப்பான் என யூகிக்க முடியவில்லை என கூறுகிறார். எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? எனக்கு என் பொண்ணு வேணும். இனியும் என் பொண்ண விட்டுட்டு இருக்க நான் ஏமாளியும் இல்ல தியாகியும் இல்ல என கூறுகிறார். எல்லோரும் என்னென்ன சொல்லியும் ஹேமா இல்லாமல் செல்ல மாட்டேன் என கண்ணம்மா பிடிவாதமாக இருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்.