பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் குறித்து ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா‌. இந்த சீரியல் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சீரியல் முடிவடைந்த கொஞ்ச நாளிலேயே பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோமா, லட்சுமியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த சீரியலில் பாரதியாக அருண் நடிக்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ரோஜா சீரியல் பிரபலம் சிப்பு சூர்யன் நடிக்க இருப்பதாகவும் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.