பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது போல காட்டப்பட்டுள்ள காட்சி ரசிகர்களை கலாய்க்க வைத்துள்ளது.

Bharathi Kannamma Romantic Promo Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பாரதிக்கு ஆறுமாதம் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து வேறு வழி இல்லாமல் கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார் பாரதி.

இந்த நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பலத்த மழையின் காரணமாக கண்ணம்மா வீட்டிற்குள் தண்ணீர் வந்து விடுகிறது. இதனை பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாரி இறைத்து வெளியே கொட்டுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது.

பாபர் அசாம்-அபித் அலி அதிரடி : வங்காள தேசத்தை மிரட்டிய கள விவரம்..

இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலின் இயக்குனரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மாடி மேல இருக்க வீட்டுக்குள்ள போய் தண்ணி வந்துச்சுனு சொல்ற பாத்தியா.. உன்னை பார்க்கணும் போல இருக்கு என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

லாஜிக்கே இல்லாமல் சீரியல் காட்சிகளை இயக்குனர்கள் தேர்வு செய்ததாக கிண்டலடித்து வருகின்றனர். இருவருக்குமிடையே இனி ரொமான்ஸ் காட்சிகள் ஸ்டார்ட் ஆகும் என்பது போல இந்த புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் யூகித்து கூறி வருகின்றனர்.

எனக்கு சோறு அவந்தாயா போடுறான் – Erode Mahesh Bold Speech | Kanmani Movie Audio Launch