மாமனாரால் பாரதியுடன் சேர்ந்து வாழ கண்ணம்மா முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Bharathi Kannamma Promo for Upcomming Episode : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

முதல் இந்திய வீரர் விராட் கோலி : விறுவிறு சாதனை 10,000

மேலும் இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்கு என்ன சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என வீட்டில் உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சனையெல்லாம் நினைத்தால் தனக்கு நெஞ்சு வலி வருவது போல இருப்பதாக சௌந்தர்யாவின் கணவர் கூறுகிறார்.

அசத்தலான சுவையில் Easy-யா செய்யலாம் மீன் வறுவல் | Fish Fry | Sea Food | Kalakkalcinema | Tamil HD

இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவர் கண்ணம்மாவை பார்க்க வேண்டும் எனக் கூற கண்ணம்மா மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். ‌‌ நான் போய் சேர வேண்டிய நேரம் வந்துடுச்சு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வீங்க என எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க என கேட்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.