இரண்டு மகள்களுடன் ஒன்று சேர்ந்து பாரதி கண்ணம்மா சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Leaked Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் விருவிருப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் இரண்டு மகள்களுடன் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் அனைவரிடமும் இருந்து வருகிறது.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

ஹேமாவுடன் அமெரிக்காவுக்கு பாரதி புறப்பட திடீரென ஹேமாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணம்மாவால் தான் ஹேமாமாவைக் காப்பாற்ற முடியும் என்பதால் பாரதி அவரைத் தேடிச் செல்கிறார்.

இப்படியான நிலையில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் இரண்டு மகள்களான ஹேமா, லஷ்மி ஆகியோருடன் கண்ணம்மா குடியிருக்கும் வீட்டில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சென்றுவிட்டதாகவும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம். ‌‌

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.