அஞ்சலியால் கண்ணம்மாவுக்கு பல நாள் தெரியாமல் இருந்த ரகசியம் அம்பலமாகியுள்ளது.

Bharathi Kannamma in Upcoming Episode Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தன்னுடைய மனைவியான கண்ணம்மாவின் கர்ப்பத்தைத் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார் பாரதி.

சுங்கச் சாவடிகளை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு தகவல்

இதனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கண்ணம்மா பாரதியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொண்டதாகத் தான் கண்ணம்மா நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரதியும் கண்ணம்மாவும் அப்படித்தான் பில்டப் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அஞ்சலி சீமந்தத்திற்கு வெண்பா வந்திருந்தபோது அவர் அஞ்சலிக்கு நலங்கு வைத்து முன்னே வருகிறார். அப்போ கல்யாணம் ஆகாதவங்க ஆசிர்வாதம் செய்யலாமா என அஞ்சலி கேட்கிறார். இதனையடுத்து அஞ்சலியின் அம்மா இதையெல்லாம் எதுக்கு நீ கேட்கிற? நீங்க கல்யாணம் ஆகாதவங்க யாராவது இருக்காங்களா என கேட்கிறார். அதற்கு அஞ்சலி இதோ இருக்காங்களே வெண்பா இவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே எனக் கூறுகிறார்.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise

இதனால் கண்ணம்மாவுக்கு பாரதிக்குக்கும் வெண்பாவுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. நாளை எபிசோடில் ஒளிபரப்பான போவது இதுதான் இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.