Fareena

தன்னை பலரும் பச்சை பச்சையாக திட்டுவதாக பெண்கள் கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டதாகவும் பாரதி கண்ணம்மா வில்லி பரீனா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannamma Fareena Emotional Speech : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

சிறந்த வில்லிக்கான விஜய் டிவி விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேடையில் ஏறியதும் பொம்மை துப்பாக்கியை கொடுத்து கண்ணம்மாவை சுடுமாறு சொன்னார்கள். வசனங்களைப் பேசி விட்டு பாரதியை சுட்டார் பரீனா.

அது பின்னர் பேசத் தொடங்கிய அவர் இந்த சீரியலில் நடிப்பதால் என்னை பச்சை பச்சையாக திட்டுகிறார்கள், ஒரு பெண் கேட்க கூடாத வார்த்தைகளை கேட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் சீரியலின் நாயகியாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பது தான் கஷ்டம். கடை விளம்பரத்தில் கூட விட மாட்றாங்க என உருக்கமாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.