வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பியுள்ளார் லட்சுமி.

Bharathi Kannamma Episode Update 28.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை யாரோ அடிப்பது போல கனவு கண்டிருந்த லட்சுமி சௌந்தர்யா வீட்டில் இருக்க முடியாமல் தன்னுடைய துணி மற்றும் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப முடிவு செய்கிறார்.

ஹேமா தன்னுடைய சித்தப்பா அகிலனுடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அவர்களுக்கு தெரியாமல் கீழே இறங்கி விடுகிறார் லட்சுமி. இந்தப் பக்கம் பாரதியும் கண்ணம்மாவும் பள்ளிக்கு குழந்தைகளை பார்க்க வருகின்றனர். இருவரும் ஒருவரையருவர் மோதிக்கொள்ள பின்னர் பாரதி எங்க போனாலும் வந்திடுவியா என திட்டுகிறார்.

நான் என் குழந்தையை பார்க்க வந்த நீங்க உங்க குழந்தையை பார்க்க வந்தீங்க என கூறுகிறார். இந்த நேரத்தில் ஒரு குழந்தை வந்து இன்னைக்கு ஹேமா ஸ்கூலுக்கு வரல என்ன சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். உடனே கண்ணம்மா லட்சுமி பற்றி கேட்க அவளும் ஸ்கூலுக்கு வரல என கூறுகிறார். பிறகு பாரதி சௌந்தர்யாவுக்கு போன் செய்ய சௌந்தர்யா அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வரல என கூறுகிறார். என்ன பிரச்சனை என கேட்க சௌந்தர்யா நேரில் வந்து சொல்கிறேன் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா போனை வாங்கி பேச ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா நீ பதற்றமாய் இருக்கிற மாதிரி காட்டிக்கோ என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா பள்ளிக்கு வந்து எல்லாம் உன்னாலதான் ஸ்கூலுக்கு வரல என கூறுகிறார். நீ என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்க இவ மூஞ்ச சின்னதா வச்சுக்கிட்டு லட்சுமி கிட்ட பேசுற. அவ எங்க அம்மாவுக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு பதற்றப் படுறா. காலைல கூட யாரும் கண்ணம்மா அடிக்கிற மாதிரி எழுந்து புலம்புறா. அதனாலதான் ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வரல என கூறுகிறார்.

பிறகு கண்ணம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு பாரதியிடம் பூஜை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நீயும் கண்ணம்மாவும் வரவேண்டும் என கூறுகிறார். வரமாட்டேன் என பாரதி கோபப்படுகிறார். பிறகு அன்னைக்குத்தான் அஞ்சலியோட குழந்தைக்கு பெயர் வைக்க முடிவு பண்ணி இருக்கும் என கூறுகிறார். குழந்தை சென்டிமெண்ட்டால லாக் பண்ண பார்க்குறாங்க என பாரதி நினைத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சௌந்தர்யா பாரதியின் கையைப் பிடித்து நீ கண்டிப்பா வரணும் இது என் மேல சத்தியம், நீ வரலைன்னா எனக்கு ஏதாவது ஆகிவிடும் என சென்டிமென்ட்டாக சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் லட்சுமியை காணவில்லை என வீட்டில் அகிலனும் ஹேமாவும் தேடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.