விடிந்ததும் பாரதியுடன் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்தே குடும்பத்தார் அனைவரும் வியந்து போயுள்ளனர்.

Bharathi Kannamma Episode Update 19.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. விடிந்ததும் கண்ணம்மா எழுந்து காபி போட்டுக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் பாரதிகண்ணம்மா எடுத்துக் கொடுத்த பட்டு வேட்டி சட்டை அணிந்து பக்காவாக வந்து நிற்கிறார். அவருக்கு காபி கொடுத்து என்ன கிளம்பிட்டீங்களா என கேட்கிறார் கண்ணம்மா. நான் கிளம்பிட்டேன் நீதான் இன்னும் கிளம்பாம இருக்க என பாரதி கூறுகிறார்.

உடனே எங்கே என கண்ணம்மா கேட்க ஃபங்ஷனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும் என கூறுகிறார். அதன் பிறகு அன்னம்மா இது கனவா நிஜமா என யோசிக்க அப்படி இருந்தாலும் நம்ப மாற்ற இப்படி இருந்தாலும் நம்ப மாற்ற ஒரு புருஷனா இருக்கிறது ரொம்ப கஷ்டம் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா ஒரு பத்து நிமிஷம் குளிச்சுட்டு ரெடி ஆகிட்டு வரேன் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு இதுவரை கோவிலுக்குச் சென்று அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்துகொண்டு அமர்கின்றனர். கனவா நிஜமா என்று தெரியவில்லை என கண்ணம்மா யோசிக்க அதனை பாரதியிடம் கேட்டு விடுகிறார். உனக்கு புடிச்சிருக்கா இல்லையா எனக் கேட்க ரொம்ப பிடிச்சிருக்கு என கண்ணம்மா சொல்கிறார். எனக்கு கோவில் ஆபீஸ் பிக் சென்று டொனேஷன் செய்ததில் இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

இந்தப் பக்கம் குழந்தைகள் இருவரையும் பார்க்கிற்கு ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டு பாரதி கண்ணம்மாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சௌந்தர்யா ஒரே பதற்றத்தோடு இருக்கிறார். நான் ஒருமுறை வெளியே போய் பார்த்துட்டு வந்து விடுகிறேன் என அவர் வெளியே வர அவருடன் சேர்ந்து எல்லோரும் வெளியே வருகின்றனர்.

இந்த நேரத்தில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வந்து இறங்குகின்றனர். பாரதி கண்ணம்மாவின் கையை பிடித்து கூட்டி வருகிறார். இந்த ஆச்சரியத்தை நம்பமுடியாமல் அனைவரும் பார்க்கின்றனர். இருவரும் ஒன்றாக ஜோடியாக வருவதைப் பார்த்து சௌந்தர்யா உற்சாகம் அடைகிறார். பிறகு இந்த படமே உனக்கு சூப்பராக இருக்கு என சௌந்தர்யா சொல்ல என்ன உங்க மருமகளை மட்டும் பாராட்டுறீஙக என்னோட ட்ரஸ் எப்படி இருக்குன்னு சொல்ல மாட்டீங்களா எனக் கேட்க உனக்கு என்னடா ஜம்முனு இருக்க என சௌந்தர்யா கூறுகிறார்.

பிறகு அஞ்சலியை ஆரத்தி எடுத்து வரச்சொல்லி இவர்களுக்கு திரிஸ்டி எடுக்கிறார் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.