வீட்டை விட்டு கிளம்பிய பாரதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 18.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவின் வீட்டிலிருந்து பாரதி நாளைக்கு கிளம்பி விடுவேன் என சொன்னதும் கண்ணம்மா கதறி அழுதார். என் வாழ்க்கை இப்படி நாசமா போகும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல என கண் கலங்கினார்.

வீட்டை விட்டு கிளம்பிய பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கதறி அழுது மயங்கி விழுந்த கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உன்ன தவிர நான் யாரையும் மனதளவில் கூட நெனைச்சது கிடையாது. இப்ப வரைக்கும் என் புருஷன் நீ மட்டும் தான். என் மனசுல ஹீரோனா அது நீ மட்டும் தான் என கதறி அழுதார்.

என் வாழ்க்கையில நீ எதுக்கு வந்த நான் உன் கிட்ட வந்து என்னை காதலி, கல்யாணம் பண்ணிக்கோ என கேட்டனா? நீயா வந்த நீயா காதலிக்கிறேன்னு சொன்ன இதெல்லாம் கனவா நிஜமானு நினைச்சு பாக்கறதுக்குள்ள என் கழுத்துல தாலி ஏறிடுச்சு. அவ்ளோ பெரிய வீட்டுக்கு மருமகளா வந்தேன். என் மேல பாசத்தை கொட்டி தீர்த்த, அதெல்லாம் கனவா நிஜமானு புரியறதுக்குள்ள என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு என கதறி அழுதார்.

இந்த கல்யாண நாளுக்கு என் கூட இருக்க இரண்டு பேரும் சேர்ந்து இருக்கணும்னு நானும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன். கல்யாண நாள் அப்போ புருஷன் புடவை வாங்கி தருவானா? நகை வாங்கித் தருவானானு ஆசை எல்லோருக்கும் இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது. நான் நினைச்ச மாதிரி அத்தை கடைக்கு கூட்டிட்டு போனாங்க பிடித்தோ பிடிக்காமலோ நீங்க எனக்கு புடவை எடுத்து கொடுத்தீங்க, நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

வீட்டை விட்டு கிளம்பிய பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கதறி அழுது மயங்கி விழுந்த கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்
Iko

ஆனா கடவுளுக்குத்தான் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே. அதான் போங்க என கண்ணம்மா கதறி அழ எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சு பாரு என்ன விட இப்போ உனக்கும் உன் பொண்ணுக்கும் பணம்தான் தேவை என பணக்கட்டுகளை எடுத்துக்கொடுக்க கண்ணம்மா இன்னும் கோபம் அடைகிறார். இன்னும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை என திட்டுகிறார்.

பணக்கட்டுகளை தூக்கி வீசி எறிந்துவிட்டு எனக்கு பணத் தேவை இருந்தது இப்பவும் இருக்கு ஆனால் சுயமரியாதையை விட்டுட்டு உன்கிட்ட வந்து நிக்கல, இனி நிக்கவும் மாட்டேன் என கூறுகிறார். என் உடம்பு எல்லாம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரைக்கும் நான் உழைப்பேன் என கூறுகிறார்.

எனக்குனு யார் இருக்கா நான் யாரிடம் சொல்லி அழுவது? ஏம்மா என்ன பெத்த என்ன பெத்துப் போட்டுட்டு நீ பாட்டுக்கு போய் சேர்ந்துட்டா. நீ இருந்திருந்தால் என்னை இப்படி விட்டு இருப்பியா? நான் இன்னும் உயிரோடு இருப்பது தெரிந்தால் தானே இவ்வளவு போராட்டம் என அழ ஏன் இப்படி எல்லாம் பேசுற என பாரதி கேட்கிறார். என தொடாதீங்க என்ன தொட்டா என் மேல இருக்க அழுக்கெல்லாம் உங்கள ஒட்டிக்கும். நீங்க ரொம்ப சுத்தமானவர் நான் அசிங்கம் பிடித்தவர் என கூறுகிறார்.

அம்மா அம்மா என அழுது கொண்டே அப்படியே கண்ணம்மா மயங்கி விழுந்து விடுகிறார். வெளியே வந்த பாரதி கண் கலங்கி அழுது விட்டு மீண்டும் உள்ளே சென்று தலையணை எடுத்து வந்து கண்ணம்மாவின் தலைக்கு வைத்து போர்வை போற்றி விடுகிறார். பிறகு மனதுக்குள் எல்லாத்தையும் மறந்துட்டு உன் கூட சேர்ந்து வாழ நான் ரெடி. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் அதை நீ கோரிக்கையாக கூட எடுத்துக்கலாம் என மனதுக்குள் சொல்கிறார்.

மறுநாள் காலையில் இந்தப் பக்கம் சௌந்தர்யா சௌந்தர்யாவும் அவரது கணவர் மற்றும் கண்ணம்மாவின் அப்பாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மா பாரதியின் வாழ்க்கை பற்றி பேசி வருத்தப்பட அப்போது சௌந்தர்யா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அன்னைக்கு உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன் ஏன் நீங்களும் அங்கு என்ன நடக்குதுன்னு பார்த்தீர்கள் தானே என சொல்கிறார். கண்ணம்மாவின் அப்பாவும் ஆமாம் என் பொண்ணோட வாழ்க்கை ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடும் என்று நம்பிக்கை இருக்கு என கூறுகிறார். உங்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டேன் ஆனாலும் எனக்குள் ஒரு பயம் இருக்கு என சௌந்தர்யா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.