இதயத்தை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்க கடைசி நேரத்தில் கண்ணம்மா செய்த உதவி கை கொடுத்துள்ளது.

Bharathi Kannamma Episode Update 16.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு பாரதி இதயத்தைக் கொண்டு வரும் அலுவலகத்தில் கணேசன் எந்த நேரத்தில் இந்த பொம்பள வாயை திறந்தாலே ஒரே நாள்ல எல்லாமே வேஸ்டா போச்சு என கண்ணம்மாவை திட்ட கடுப்பான பாரதி கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வாங்க கண்ணம்மா செய்த கேட்டதால் தான் இப்போது இதயத்தை கொண்டு செல்ல முடிகிறது. அன்னைக்கே கண்ணம்மா மழை வரும்னு சொல்லி இருக்காங்க என சொல்லும்போது நீங்கள் தான் கேட்கல திட்டத்தை சரியா போடாம அவங்கள குறை சொல்லாதீங்க எனத் திட்டுகிறார்.

விபத்தில் சிக்கிய இதயம் கொண்டு வந்த ஆம்புலன்ஸ்.. கடைசி நேரத்தில் கண்ணம்மா செய்த வேலை - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்புலன்ஸ் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்க கனமழை காரணமாக மதுராந்தகம் அருகே மரம் விழுந்து ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது. ஆம்புலன்ஸ் டிரைவர் காயத்துடன் உயிர் தப்ப மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் காப்பாற்றப்படுகின்றனர்.

பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு சபரி ஆம்புலன்சை அங்கிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தும் எதுவும் முடியாமல் இருக்க அந்த நேரத்தில் இன்னொரு அம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. வண்டியிலிருந்து கண்ணம்மா இறங்கி பாதுகாப்பிற்காக இன்னொரு ஆம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்திருந்தேன். சீக்கிரம் வண்டியில் ஏறுங்க நேரம் இல்லை என சொல்ல பிறகு பாரதி இதயத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சிறியரக கணேசன் ஏற முயற்சி செய்ய நீங்க எங்க போறீங்க இங்க இருக்க பிரச்சனைகளை சரிசெய்து விட்டு வாங்க, கண்ணம்மா சீக்கிரம் ஏறு, நேரம் இல்லை என கூறி கண்ணம்மாவை ஏற்றிக் கொண்டு கிளம்புகிறார்.

விபத்தில் சிக்கிய இதயம் கொண்டு வந்த ஆம்புலன்ஸ்.. கடைசி நேரத்தில் கண்ணம்மா செய்த வேலை - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

திட்டமிட்டபடி ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஆம்புலன்ஸ் சென்னை மருத்துவமனையை அடைகிறது. நடந்த விஷயங்களால் பாரதி பதற்றத்தோடு இருக்க அவரை கண்ணம்மா கூல் செய்து ஆப்பரேஷனுக்கு அனுப்பி வைக்கிறார். இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி அடைகின்றனர்.