கண்ணம்மாவை பெண் பார்க்க வந்த பாரதி கண்டீஷன் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மாவின் ஆசையை அறிந்து கொள்ள அவளது டைரியை தேடி ரூமுக்கு சென்ற நிலையில் டைரியைத் தேடி எடுத்ததும் கண்ணம்மா லைட்டை போட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு கணபதியும் உள்ளே வந்துவிட ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் எழுந்து விடுகின்றனர். எதுக்காக ரூமுக்கு வந்தீங்க என கேட்க பாரதி கண்ணம்மா வித்தியாசமா கல்யாணம் பண்ணனும்னு சொன்னா ஆனா அவளது ஆசை என்னனு எனக்கு இன்னமும் தெரியல, அதனால டைரியில ஏதாவது எழுதி வச்சிருப்பானு டைரியை எடுக்க வந்தேன் என சொல்கிறார்.

பிறகு கண்ணம்மா பசுமையாக பச்சை பசேல் என இருக்கும் இயற்கைக்கு நடுவே கல்யாணம் பண்ணி வாழ்க்கையை தொடங்கணும்னு ஆசை என கூறுகிறார். அடுத்ததாக பாரதி குழந்தைகள் எங்களுக்கும் சில ஆசைகள் இருக்கு என சொல்கின்றனர். பாரதி என்னவென்று கேட்க இந்த கல்யாணம் கலர்ஃபுல்லா இருக்கணும், பொண்ணு பார்க்கிறது, நலங்கு வைக்கிறது, நிச்சயதார்த்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைக் கட்டணும் என்று கூறுகின்றனர்.

அதுக்கலாம் நேரம் ஆகுமே என பாரதி சொல்ல கண்ணம்மா குழந்தைங்க ஆசை படுறாங்க, கிளம்புங்க போயிட்டு நாளைக்கு வந்து பொண்ணு பாருங்க என சொல்லி அனுப்ப மறுநாள் காலையில் பெண் பார்க்க வர கண்ணம்மாவை தயார் செய்து ஹேமா லட்சுமி உள்ளிட்டோர் அழைத்து வருகின்றனர்.

பிறகு பாரதி பொண்ணுக்கு பாட தெரியுமா என கேட்க கண்ணம்மா பாட்டு பாடுகிறார். பிறகு சமைக்க தெரியுமா என கேட்டு சமையல் ரெசிபி ஒன்றை சொல்ல சொல்கிறார். அடுத்து பாரதி நான் கொஞ்சம் தனியா பேசணும் என சொல்ல எல்லோரும் கண்ணம்மாவுடன் தனியாக பேச வேண்டும் என சொல்வதாக நினைத்து கண்ணம்மாவை போய்ட்டு பேசிட்டு வருமாறு சொல்கின்றனர்.

ஆனால் பாரதி பொண்ணோட அப்பா கிட்ட தனியா பேசணும் என சொல்லி கண்ணம்மாவின் அப்பாவை அழைத்துச் செல்கிறார். குழந்தை என ஆரம்பிக்க அதற்குள் எல்லோரும் வந்து திரும்பவும் பழைய கதை எல்லாம் ஆரம்பிச்சி கண்ணம்மாவை பேக தூக்கிட்டு நடக்க விட்டு விடாதீர்கள் என கணபதி சொல்லி நக்கல் அடிக்கிறார்.

பிறகு பாரதி கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ள மூணாவது குழந்தை பெத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுறேன். நீங்க அதுக்கு அனுமதி தரணும் என கேட்க அவர் இதை நீங்க கண்ணம்மா கிட்டயே கேளுங்க என வெட்கப்படுகிறார். பிறகு தாமரை இன்னும் நிறைய வேலை இருக்கு, அதெல்லாம் பார்க்கலாம் நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும் என சொல்ல கண்ணம்மாவும் மூணாவது குழந்தைக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.