பாரதியை திருமணம் செய்ய வெண்பா விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஷர்மிளா வீட்டிற்கு ஜோதிடரை அழைத்து வந்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கின்றனர். ஜோதிடருக்கு ரோஹித் பணம் கொடுத்து சீக்கிரமாக ஒரு நாளை சொல்லுமாறு கூறுகிறார். ஜோதிடரும் அக்டோபர் ஏழாம் தேதி கல்யாணத்தை வச்சுக்கலாம் என சொல்ல ஷர்மிளா சரி என சொல்லி கல்யாண வேலைகளை உடனடியாக தொடங்குகிறார்.

பாரதியை திருமணம் செய்ய வெண்பா எடுத்த விபரீத முடிவு?? பாரதி எடுக்க போகும் முடிவு என்ன? - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வெண்பா சாந்தியை வெளியே அனுப்பி வைத்துவிட்டு பாரதியை திருமணம் செய்து கொள்ள ஒரு திட்டம் தீட்டி நாடகம் போட தயாராகிறார்‌. இந்த பக்கம் பாரதி ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வர சௌந்தர்யா அவரை அழைத்து லட்சுமிக்கு அப்பாவாக பேசியதைப் பற்றி கூறி உன் மனதில் என்னதான் இருக்கிறது உன்னை புரிந்து கொள்ளவே முடியல என கேட்கிறார். என்னை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை இதை பற்றி பேச வேண்டாம் என பாரதி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

பாரதியை திருமணம் செய்ய வெண்பா எடுத்த விபரீத முடிவு?? பாரதி எடுக்க போகும் முடிவு என்ன? - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக அவர் காரில் வெளியே சென்று கொண்டிருக்கும் போது வெண்பா போன் போட்டு திரும்பவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பேச பாரதி அதற்கு வாய்ப்பே இல்லை என திட்டி போனை வைக்கிறார். பின்னர் வெண்பா கையில் விஷப்பாட்டில் வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பாரதிக்கு போன் போடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.