கண்ணம்மா கொடுத்த ஷாக்கால் பைத்தியம் போல மாறியுள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 30.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாரதிக்கு வெண்பா வீடியோ கால் செய்ய அதை எடுத்து பேசிய கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்றுகிறார். பாரதியோட போன் எப்படி உன் கையில வந்தது என கேட்கிறார். புருஷனோட போன் பொண்டாட்டி கிட்ட இருக்காமல் வேறெங்கு இருக்கும் எனச் சொல்கிறார். பாரதி எங்கே என கேட்க இவ்வளவு நேரம் இங்க தான் எங்களோட உட்கார்ந்து ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தார். இப்போதான் பேஷன்ட் பண்றாங்கன்னு போனார். நாங்க ரெண்டு பேர் மட்டும் அல்ல அத்தை என் பொண்ணு இலட்சுமி அவர் பொண்ணு ஹேமா என எல்லோரும் ஒன்றாக தான் இருக்கோம் என கூறி அவர்களையும் வீடியோ காலில் காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த வெண்பா கடுப்பாகிறார். சரி அவர் வர நேரமாச்சு நாங்க ஒன்னா ஜாலியா உக்காந்து சாப்பிட போறேன் நான் வைக்கிறேன் என போனை கட் செய்கிறார் கண்ணம்மா.

கண்ணம்மா கொடுத்த ஷாக்கால் ரூமில் பொருட்களை தூக்கி போட்டு உடைத்து நொறுக்குகிறார் வெண்பா. இந்த பக்கம் பாரதி வந்ததும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். பிறகு சௌந்தர்யா இரண்டு குழந்தைகளோடு கை கழுவச் செல்ல அப்போது கண்ணம்மா பாரதிக்கு நன்றி சொல்கிறார். பொண்டாட்டிய சந்தேகப்படக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை சொன்னதுக்கும், எங்களோட ஒண்ணா உக்காந்து சாப்பிடுவதற்கும் தேங்க்ஸ் என கூறுகிறார். உங்க மனசுல மாற்றம் ஏற்பட்டிருக்கும் என கூறுகிறார்.

அவன் பிரச்சனை வேற, இங்கே நடந்த பிரச்சனை வேற, அத நீ தப்பா புரிஞ்சுகிட்ட நான் பொறுப்பில்லை எனக் கூறுகிறார். பிறகு பாரதி கண்ணம்மாவிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என கூறுகிறார். உன்னோட விவாகரத்து கேஸ் வருது. நானும் வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருக்கும் வாகனத்தை கிடைத்துவிடும் பிரிந்து நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் சென்று விடலாம். அதுக்கப்புறம் இந்த ட்ராமா எல்லாம் தேவையே இல்லை என கூறுகிறார்.

இதைக்கேட்டு கண்ணம்மா, லட்சுமி என இருவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த பக்கம் வெண்பா அழுது புலம்ப அப்போது வந்த ஷர்மிளா எவ்வளவு வேண்டுமானாலும் அழுது தீர்த்திடு. இந்த அழுகையில் பாரதியின் மீதான காதல் கரைந்து போய்டணும் என கூறுகிறார். மேலும் சாந்தியிடம் ரூமை கிளீன் பண்ணிட்டு அப்படியே அந்த போட்டோக்கள் எல்லாத்தையும் எடுத்து க்ளீன் பண்ணு. பாரதியின் ஞாபகப் படுத்துற எந்த ஒரு பொருளும் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என சொல்ல வெண்பா மேலும் அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.