
பாரதியால் பிச்சைக்காரனாக மாறியுள்ளார் அவரது அப்பா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவிடம் உங்க அப்பா உன்னை நலம் விசாரிச்சதுக்கு எதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுற எனக்கு கேட்க முதல் முறையாக என் அப்பா என்கிட்ட இப்படி பாசமா பேசி இருக்காரு என கண்ணம்மா சொல்கிறார்.

சின்ன வயசுல இருந்தே அவர் என்கிட்ட கோபமா தான் நடந்துக்குவாரு திரும்ப வந்த பிறகும் கூட அப்படியேதான் இருந்தாரு என சொல்லி உனக்கு அப்பாவோட பாசம் நிறையவே கிடைத்திருக்கும் என சொல்ல பாரதி கண்கலங்குகிறார்.
பிறகு கண்ணம்மா காரணம் கேட்க சின்ன வயதில் தனக்கு அம்மை போட்டு அது குணமாகாத காரணத்தினால் கோவிலுக்கு சென்று என்னுடைய அப்பா அம்மா உனக்கு கோடி கோடியாக காணிக்கை கொடுத்தேனே என பேசிக்கொண்டு இருக்கேன். அப்போது வந்த சாமியார் நீ கொடுத்ததெல்லாம் சொல்லிக்காட்டுற அதனால தான் உன் புள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனை.

போயிட்டு பிச்சை எடுத்து அந்த காசை உண்டியல்ல போடு உன் புள்ளைக்கு சரி ஆகும் அவன் உயிர காப்பாத்து என கூறுகிறார். இதனால் பாரதியின் அப்பா மாறு வேடத்தில் கோவில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுக்க போலீஸ் அவரை திருட்டு கேட்டு அடித்து உதைக்க அதை சௌந்தர்யா பார்த்து கண் கலங்குவது என பிளாஸ் பேக்குடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.