கண்ணம்மா வீட்டுக்கு போன பாரதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 29.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கோர்ட்டின் உத்தரவுப்படி 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதால் கண்ணம்மா வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார் பாரதி. போகும் போது காரில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனது தப்பாயிடுச்சு. இப்படியே தனித்தனியா இருந்துட்டு இருக்கலாம். அவ என்னை மயக்கி என் கூட சேர்ந்து வாழ என்ன வேணாலும் செய்டா அதையெல்லாம் பார்த்து மயங்கி விடக்கூடாது. பகல் முழுக்க ஹாஸ்பிடல். லேட் நைட்ல வீட்டுக்கு போய் தூங்கி எழுந்ததும் ஹாஸ்பிடலுக்கு வந்துடணும். அவளே போதும்டா சாமின்னு சொல்ற அளவுக்கு மோசமா நடந்துக்கணும் என முடிவு செய்கிறார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

இந்த பக்கம் கண்ணம்மா மாடியில் துணி எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் காரில் வந்து இறங்குகிறார் பாரதி. கீழே அந்த வீட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தபோது யார் நீங்க என்ன வேண்டும் என கேட்கிறார். பாரதி பதில் சொல்லாமல் அது வந்து என திக்கித் திணறி நிற்க கண்ணம்மா எங்க வீட்டுக்குத்தான் வந்திருக்காரு என கூறுகிறார்.

பிறகு வீட்டுக்குள் வந்த பாரதி ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆகிறார். இதுக்காகத்தான் உன்கிட்ட இருந்து விவாகரத்து பெற முடிவு செய்தேன். என்கிட்டே இருந்து என் பொண்ண மொத்தமா பிரிக்க பார்க்கிற. முதல்ல இந்த போட்டோவ எல்லாம் எடு என கூறுகிறார். உன் போய் கைகால் கழுவிட்டு வாங்க என கண்ணம்மா சொல்லியும் அதை கேட்காமல் பாரதி முதல்ல இந்த போட்டோவை எல்லாம் எடு என கூறுகிறார். பிறகு கண்ணம்மா இந்த போட்டோவை எல்லாம் எடுக்கிறார்.

மேலும் பாரதி கண்ணம்மாவிடம் ஜெயில் மாதிரி நினைச்சு தான் இந்த வீட்ல இருக்கேன். கோர்ட் சொன்ன மாதிரி ஆறுமாசம் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். ஆறு நாள்ல போதும்டா சாமி, கோர்ட்டுல விவாகரத்து கேட்ட போது கொடுக்க மாட்டேன் என்று சொன்னது தப்பா போச்சு என நீயே என்ன அனுப்பி வைக்கிற அளவுக்கு நான் நடந்துப்பேன் என பாரதி கூறுகிறார். இதையெல்லாம் காது கொடுத்து கேட்காத கண்ணம்மா டி-யா? காபியா? என கேட்கிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away

பாரதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க காபித்தூள் கம்மியா இருக்கு போய் வாங்கிட்டு வாங்க என கண்ணம்மா கூறுகிறார். நீயும் வேண்டாம் உன் காபியும் வேண்டாம் என உள்ளே சென்று விடுகிறார் பாரதி. ‌‌

பிறகு கண்ணம்மா லஷ்மியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கு வருகிறார். அங்கு ஹேமாவை அழைத்துக் கொண்டு செல்ல வந்த சௌந்தர்யா கண்ணம்மாவிடம் பேசுகிறார். நல்ல நல்ல புடவையாக கட்டு பளிச்சுனு இரு. அவ பேசுறத பேசட்டும் அவனை பேசவிடு. என்ன பத்தி தப்பா சொல்லும் கேரக்டர் பத்தி தப்பா சொல்லுவான் அதையெல்லாம் கண்டுக்காத. கோவப்படாத. எவ்வளவு நாளைக்கு அதை எல்லாம் பேசுவான் ஒரு கட்டத்தில் எல்லோரும் கண்ணம்மாவுக்கு ஆதரவா இருக்காங்க நாம செய்றது தான் தப்பு என அவனுக்கு புரியும். கோர்ட்டு சொன்ன ஆறு மாசம் முடிஞ்சதும் அவன் கொடுத்த விவாகரத்து வழக்கை அவனே வாபஸ் வாங்கணும் என சொல்ல நீங்க ரொம்ப பேராசை படாதீங்க அத்தை என கண்ணம்மா கூறுகிறார். என் மகனும் மருமகளும் சேர்ந்து வாழனும் நான் ஆசைப்படுவது பேராசையா போயிடுச்சே என சௌந்தர்யா சொல்கிறார். பிறகு லட்சுமியை நினைத்தால்தான் கவலையா இருக்கு. டாக்டர் அங்கிள் ஏன் இங்கே இருக்காருன்னு கேட்டிட்டே இருப்பா. அத அவ என்கிட்ட சொல்ல ஹேமா வந்து உங்களிடம் கேட்பா. எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல என கண்ணம்மா கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்கூல் பெல் அடித்து இருவரும் வந்து விடுகின்றனர்.

ஹேமா சௌந்தர்யாவிடம் டாடி வரலையா என கேட்க அவருக்கு மெடிகல் கேம்ப் ஆறு மாசத்துக்கு வீட்டுக்கு வர மாட்டாரு என கூறுகிறார். என்னது ஆறு மாசமா அவ்வளவு நாளைக்கு நான் டாடிய பார்க்கவே முடியாதா. டாடி இல்லாம வீட்டில போரடிக்கும் என ஹேமா சொல்கிறார். டாடி அப்பப்ப ஸ்கூல்ல வந்து பார்ப்பான். வீட்டுக்கு தான் வரமுடியாது என கூறுகிறார். பிறகு சௌந்தர்யா லட்சுமியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறுகிறார். கண்ணம்மா அவ நான் இல்லாமல் இருக்கமாட்டார் என கூறுகிறார். உடனே லஷ்மி அதெல்லாம் நான் இருப்பேன் மா. நான் போயிட்டு வரேன் என கூறுகிறார். அம்மாவை மறந்துடாத ஹோம் ஒர்க் எல்லாம் கரெக்டா செய்யணும் என கூறுகிறார் கண்ணம்மா.

அது எப்படி உன்ன போய் மறப்பேன். நான் பாட்டி போன்ல இருந்து அடிக்கடி உனக்கு போன் பண்ணி பேசுறேன் என கூறுகிறார். பிறகு மூவரும் காரில் கிளம்ப இத்துடன் பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவரைகிறது. இதனையடுத்து வெளியான நாளைய புரோமோ வீடியோவில் பசிக்குதா சாப்பிட்டீங்களா என்ன கண்ணம்மா கேட்க பசிக்குது தான் ஆனா இந்த வீட்டில் சாப்பிட மாட்டேன் நெய் தோசை தேங்காய் சட்னி ஆர்டர் பண்ணி இருக்கேன் என பாரதி கூறுகிறார். பிறகு சாப்பாடு வந்ததும் அதை சாப்பிட்டால் நன்றாக இல்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.