தப்பித்த வெண்பாவுக்கு கண்ணம்மாவால் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா மண்டபத்தில் இருந்து தப்பி தப்பித்த நிலையில் இந்த பக்கம் பாரதி டிஎன்ஏ ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருக்க அப்போது வெண்பா பாரதிக்கு போன் போட்டு நான் மண்டபத்தில் இருந்து தப்பிச்சிட்டேன் பொன்னியம்மன் கோயிலுக்கு தான் வந்துட்டு இருக்கேன் நீ கோவில் வெளியேவே காத்துக்கிட்டு இரு, அங்க ஒரு அக்கா கிட்ட மாலைக்கு சொல்லி இருக்கேன் என சொல்ல பாரதி நான் இன்னும் வரவில்லை, வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறாள்.

தப்பித்த வெண்பாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, சாந்தியை வைத்து கண்ணம்மா போட்ட திட்டம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

என்ன ஏமாத்திடாதே பாரதி நீ வரலன்னா நான் இப்படியே காரன் எங்கேயாவது விட்டு ஆக்சிடென்ட் பண்ணி இறந்து போயிடுவேன் என்னை நீ பிணமா தான் பாக்கணும் என மிரட்ட பாரதி என் வீடு பக்கத்துல தான் இருக்கு பத்து நிமிஷத்துல வந்துடுவேன் என சொல்லி டி என் ஏ டெஸ்ட் அதுக்குள்ள வந்துடும் நாம கிளம்பி போகலாம் என முடிவெடுக்கிறார்.

இந்த பக்கம் வெண்பா காணாமல் போனதை நினைத்து எல்லோரும் அழுது புலம்பிக்கொண்டிருக்க அப்போது சாந்தி நாம அமைதியா இருந்தா சந்தேகம் வந்துடும் என கணக்கு போட்டு அழுது டிராமா போட கண்ணம்மாவுக்கு சாந்தி மேல் சந்தேகம் வந்து வெண்பா எங்கே என கேட்க எனக்கு தெரியாது என பொய் சொல்ல பளாரென அறைந்து கேட்க அப்படியும் எனக்கு தெரியாது என சொல்கிறார்.

தப்பித்த வெண்பாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, சாந்தியை வைத்து கண்ணம்மா போட்ட திட்டம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அரிவாள் மனையை கழுத்தில் வைத்து மிரட்டி கேட்க வெண்பா பாரதியை கல்யாணம் பண்ணிக்க போறாங்க என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.