பாரதி செல்போனை கண்ணம்மா வீட்டில் மறைத்து வைத்து வந்த நிலையில் அதனை கொண்டு வந்து கொடுப்பதற்காக பாரதி வீட்டிற்கு வந்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 29.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நேற்று கண்ணம்மா வீட்டிற்குச் சென்றிருந்த பாரதி போனை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்தார். மறுநாள் காலையில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் ஹேமா விஷயத்தில் என்ன செய்வது என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

பாரதி வீட்டில் கண்ணம்மா.. பைத்தியமாகும் வெண்பா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்தப் பக்கம் வெண்பா பாரதி ஏன் கண்ணம்மா வீட்டுக்கு போகணும்? இருவரும் கொஞ்சி குலவ ஆரம்பித்து விட்டார்களா என தெரியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறார். சாந்தி காபி கொண்டு வந்து கொடுக்க அதனை தூக்கி எறிகிறார் வெண்பா.

இந்தப் பக்கம் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க அந்த நேரத்தில் கண்ணம்மா பாரதி வீட்டிற்கு கிளம்புகிறார். ஹேமாவுக்கு எதையாவது செய்து கொண்டு போக வேண்டும் என முடிவு செய்து இனிப்பு பலகாரம் செய்து அதனை எடுத்துக் கொண்டு செல்கிறார். வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஹேமா ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும் எனக் கூறுகிறார். பாரதி ஆன்லைனிலேயே கட்டிவிடலாம் என தன்னுடைய போனை தேட போன் இல்லை. ரூமில் இருக்கும் என ஹேமா நான் எடுத்து வருகிறேன் என ரூமுக்கு சென்று பார்க்கிறார். ஆனால் அங்கும் இல்லை.

இந்த நேரத்தில் கண்ணம்மா உள்ளே வருகிறார். சமையல் அம்மாவைப் பார்த்த ஹேமா உற்சாகம் அடைகிறார். முத்தமிட்டுக் கொஞ்சிய கண்ணம்மா அவருக்கு இனிப்பு பலகாரம் செய்து வந்திருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அஞ்சலி, அகிலன் என எல்லோருக்கும் கொடுக்கிறார். பிறகு பாரதி இங்கு இருக்கப் பிடிக்காமல் அகிலனிடம் என் போனுக்கு ஒரு போன் செய் எனக் கூறுகிறார்.

உடனே கண்ணம்மா என் பொண்ணுக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைக்கிற டாக்டர் சார் நம்பர் என்கிட்ட இருக்கு என கண்ணம்மா போன் செய்கிறார். போன் ரிங்கை கேட்டு ஹேமா போன் இங்கு தான் இருக்கு என தேடுகிறார். ஆனால் அவரது கைக்கு கிடைக்கவில்லை. பிறகு கண்ணம்மா மீண்டும் போன் அடிக்கிறார். சமையல் அம்மா போன் உங்க பேக்ல தான் இருக்கு என கூற கண்ணம்மா அதனை எடுக்கிறார். ஹேமா பாரதியின் போனை வாங்கிக் கொள்ள உடனே பாரதி அதனை பிடிங்கி கொள்கிறார்.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction

லஷ்மிக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் கொடுத்து அவங்க வீட்டுக்கு போயிருந்தேன் அப்போ போனை மறந்து வைத்துவிட்டு வந்தேன் என வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். இந்த பக்கம் பாரதி கூட என்னிடம் எதையும் முழுதாக எதையும் ஷேர் செய்வதில்லை. எல்லாமே கையை விட்டுப் போகிற மாதிரி இருக்கு. எனக்கு பாரதி நிச்சயம் வேண்டும். ஒருவேளை எனக்கு தெரியாமல் பாரதியும் கண்ணம்மாவும் கூட்டு சேர்ந்து விட்டால் இரண்டு பேரையும் கொன்று விட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் என கூறுகிறார். சாந்தி நீங்க நேரா பாரதியை பார்த்து பேசுங்க என கூறுகிறார். இதனால் வெண்பா பாரதி வீட்டுக்கு கிளம்புகிறார்.

இங்கு ஹாஸ்பிடலுக்கு ரெடியாகி மாடியில் இருந்து கீழே வருகிறார். அப்போது கண்ணம்மா கிளம்பி விட்டாரா என தேடுகிறார். அகிலன் என்னடா தேடுற எனக் கேட்க ஒன்னும் இல்லை என கூறுகிறார். பிறகு இந்த பக்கம் கண்ணம்மா ஹேமாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.