லாரியில் இருந்து ஹேமா கண்ணம்மாவுக்கு குளு கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் லாரியில் சென்று கொண்டிருக்கும் ஹேமா படத்தில் இருந்து காரனுக்கு தெரியாமல் அவனுடைய போனை எடுத்து பாரதிக்கு போன் போட முயற்சி செய்ய அவரது மொபைல் சுவிட்ச் ஆப் என வருகிறது. பிறகு கண்ணம்மாவுக்கு போன் போட நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் ஹேமா பாரதி சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தி கண்ணம்மாவுக்கு லைவ் லொகேஷன் அனுப்புகிறார்.

குளூ கொடுத்த ஹேமா.. கண்ணம்மா எடுத்த முடிவு, வெண்பாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அதன் பிறகு இந்த பக்கம் ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா காருக்குள் ஏறியதும் அவருக்கு மெசேஜ் வர அதில் லொகேஷன் யாரோ அனுப்பி இருப்பதை பார்த்து ஒரு வேலை ஹேமாவாக இருக்கலாம் என சொல்லி அந்த லொகேஷனை பின் தொடர முடிவெடுக்கின்றனர்.

வேக வேகமாக காரில் அந்த லொகேஷனை பின் தொடர்ந்து வர இந்த பக்கம் பாரதி கோவிலில் கண்ணம்மா நல்லவள் தான் ஹேமா லட்சுமி என இரண்டு குழந்தையும் என்னுடைய குழந்தைகள் என ரிசல்ட் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார். கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்டு அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என பாரதி கடவுளிடம் வேண்டுகிறார்.

குளூ கொடுத்த ஹேமா.. கண்ணம்மா எடுத்த முடிவு, வெண்பாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு பார்டர் செக் போஸ்டில் லாரி வந்து நிற்க காரும் அதே செக் போஸ்டில் வந்து நிற்கிறது. இதனால் காரில் இருந்து இறங்கி லொகேஷன் தேடுகின்றனர். கண்ணம்மா ஹேமா இருக்கும் லாரி அருகே வந்து நின்று தேடி அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்யும்போது அவளது புடவை லாரியுடன் சிக்கி கொள்கிறது. கண்ணம்மாவை பார்த்ததும் ரவுடிகள் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.