வெண்பாவிடமிருந்து பாரதிக்கு வந்த ஃபோன் கால் அவர் வெண்பாவை திட்டி தீர்த்து தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 27.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கீழே வந்த பாரதி தன்னுடைய குடும்பத்தாரிடம் ஆறு மாத காலத்திற்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டதாக கூறுகிறார். இதனைக் கேட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நான் இதுக்காக உன் கிட்ட போராடனும் னு நினைச்சேன் ஆனா நீ இவ்வளவு ஈசியா போய் சொல்லுவேன் நான் நினைச்சு கூட பாக்கல என சௌந்தர்யா கூறுகிறார். இந்த வீட்ல கண்ணம்மா ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குறதை நான் பார்க்கணும் என கூறுகிறார். உடனே பாரதி அதெல்லாம் கனவுல கூட நடக்காது என கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

வெண்பாவிடமிருந்து பாரதிக்கு வந்த ஃபோன் கால்.. பாரதி கொடுத்த பதிலடி, உற்சாகத்தில் குடும்பம் - இன்றைய பாரதிகண்ணம்மா முழு எபிசோட் அப்டேட்

உடனே அவரது அப்பா நான் சொன்னதெல்லாம் பொய் யான சொல்லப் போகிறாயா என கேட்கிறார். இல்ல ஆறு மாதத்திற்கு அவளோட தான் இருக்க போகிறேன் ஆனால் இந்த வீட்ல இல்ல நான் அவளோட வீட்டுக்குப் போகிறேன் என கூறுகிறார். இதைக்கேட்டு குடும்பத்தார் இன்னும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆறு மாசத்துக்கு பல்ல கடிச்சுட்டு இருந்து விடுவேன் என சொல்ல அகிலன் பார்த்துடா பல்லு கீழே விழுந்துட போது என கூறுகிறார்.

அதன்பிறகு சொல்லவேண்டிய உங்க கிட்ட சொல்லிடுங்க என பாரதி கூறிவிட்டு மேலே செல்கிறார். கண்ணம்மா பாரதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற சிந்தனையில் இருக்கும் போது லஷ்மி நபர் வீட்டுக்கு செடியில் பூத்ததாக ரோஜா பூவை எடுத்து வருகிறார். அதன்பிறகு லஷ்மியை பள்ளிக்கு தயாராக சொல்லி அனுப்புகிறார். இந்த நேரத்தில் அவருக்கு சௌந்தர்யாவிடம் இருந்து போன் வருகிறது. ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டதை கூறுகிறார். மேலும் அவன் உன்னோட வீட்டுக்கு வருகிறான் என கூறுகிறார். கண்ணம்மாவும் சரி என கூறி லட்சுமியிடம் என்ன சொல்வது என கூறுகிறார். ஒரு நாளை சமாளிக்கலாம் 6 மாதத்தை சமாளிப்பது எப்படி என கேட்கிறார். அதைப்பற்றி எல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என கூறி போனை வைத்து விடுகிறார் சௌந்தர்யா.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR

வெண்பாவிடமிருந்து பாரதிக்கு வந்த ஃபோன் கால்.. பாரதி கொடுத்த பதிலடி, உற்சாகத்தில் குடும்பம் - இன்றைய பாரதிகண்ணம்மா முழு எபிசோட் அப்டேட்

பாரதி வருவதால் தன்னை அழகு படுத்திக் கொள்கிறார் கண்ணம்மா. பிறகு நான் எதுக்கு இப்படி எல்லாம் அலங்காரம் பண்ணனும் என யோசிக்கிறார். வீட்டுக்கு கெஸ்ட் ஒருத்தர் வந்து வீட்டை சுத்தமாக வைத்திருப்பது இல்லையா அப்படித்தான் என அவரே ஒரு முடிவுக்கு வருகிறார்.

இந்த பக்கம் பாரதி ரூமில் இருக்கும் போது அவருக்கு புதிய நம்பரில் இருந்து போன்கால் ஒன்று வருகிறது. அட்டன் செய்து பேசினால் பேசுவது வெண்பா. அஞ்சலி விஷயத்தில் வெண்பா செய்த தவிர செம கடுப்பாகி உள்ள பாரதி வெண்பாவை கண்டபடி திட்டி துரோகி இனி என் முகத்திலேயே முழிக்காதே என கூறுகிறார். நீ இப்போ செய்துகொள்ள போயிருக்க கேஸ்ல கூட தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு நம்பினேன். ஆனா இப்போ அந்த நம்பிக்கை கூட எனக்கு இல்ல. உன் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருக்கிறது தான் சரி என போனை வைத்து விடுகிறார்.

பிறகு மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு கிளம்புகிறார். வீட்டில் அனைவரும் சுமந்து கொண்டிருக்க அவர்களிடம் சென்று ஆறு மாத காலத்திற்கு அங்கு இருக்கப் போவதை கூறுகிறார். சௌந்தர்யா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு எதுவும் மறந்துடாத. அப்படியே ஏதாவது மறந்து விட்டு போனால் ஒரு போன் பண்ணு அகிலிடம் கொடுத்து அனுப்புகிறேன். அப்படி இல்லன்னா நானே கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறுகிறார். பாரதி அப்பா பேக் சின்னதா இருக்கு டிரஸ் போதுமடா என்கிட்ட பெரிய பேக் இருக்கு எடுத்துட்டு போறியா என கேட்கிறார். ஆறு மாத காலத்திற்கு இந்த பக்கம் நான் வந்து விடவே கூடாது என நினைக்கிறீர்களா என பாரதி கூறுகிறார்.

அதன் பின்னர் இந்த வீட்டில் நான் இல்லாதபோது என்னை மிஸ் செய்கிற ஒரே ஜீவன் அது ஹேமா குட்டி தான். தயவுசெய்து அவகிட்ட என்ன பொய் சொன்னாலும் சொல்லுவாங்க ஆனா சமையல் அம்மா வீட்ல இருக்கேன் மட்டும் சொல்லிடாதீங்க என கூறுகிறார். இந்த ஒரே ஒரு உதவியும் மட்டும் எனக்காக செய்யுங்க என சொல்கிறார். அதன்பிறகு பாரதி அங்கிருந்து கிளம்ப அகில் உன் வைஃப்பை கேட்டதா சொல்லு இல்ல இல்ல அண்ணியை கேட்டதா சொல்லு என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.