பாரதியிடம் உண்மையை உடைக்க கிளம்பும் கண்ணம்மா. கடைசியில் அவருக்கே ஒரு ஷாக் காத்துக் கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 27.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி மற்றும் ஹேமாவை கண்ணம்மா வீட்டிலிருந்து அழைத்து சென்ற பாரதி வீட்டில் அனைவரிடமும் எரிமலையாய் எரிந்து விழுந்தார். அப்பா அம்மா தம்பினு எனக்கு யாரும் தேவையில்லை எனக்கு ஹேமா மட்டும்தான். அவள மட்டும் என்கிட்ட இருந்து பிரிக்க நெனச்சீங்க அதுக்கப்புறம் பாரதியோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க என சொல்கிறார்.

துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

உண்மையை உடைக்க போன கண்ணம்மா.‌.‌ காலில் விழாத குறையாக கெஞ்சும் பாரதி- பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் அப்டேட்.!!

அதன்பிறகு சௌந்தர்யா பாரதி பேசிட்டு போய்ட்டான் அந்தப்பக்கம் கண்ணம்மா என் குழந்தைய எப்படி என்கிட்ட சொல்லாமல் தூக்கிட்டு போகலாம்னு சத்தம் போடுவா? என புலம்புகிறார். சௌந்தர்யா சொன்னபடியே கண்ணம்மா போன் போட்டு அவர் ஒரு பக்கம் சௌந்தர்யாவிடம் எரிந்து விழுகிறார். இனிமே என் பொண்ணை விட்டு இருக்க முடியாது அவள என்கிட்ட ஒப்படைத்து விடுங்கள் என கூறுகிறார்.

அஞ்சலி ரூமிற்குள் அந்த பாட்டி கொடுத்த நாட்டு மருந்தை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடலாமா வேண்டாமா என யோசிக்கிறார். வெண்பா மற்றும் என்னை செக் செய்த டாக்டர் இது பெரிய பிரச்சனை என்று சொன்னாங்க. டாக்டருக்கு படிச்ச அவர்களே அப்படிச் சொல்லும் போது சாதாரண நாட்டு வைத்தியம் பாட்டி வைத்தியம் எப்படி செட் ஆகும் என யோசிக்கிறார். இன்னொரு பக்கம் வெண்பா தனக்கு கொடுத்தது தவறான மாத்திரை என புரிந்து கொள்கிறார். நல்ல மனசோட அந்த பாட்டி கொடுத்த மருந்தை நம்பிக்கையோடு சாப்பிடுவோம் என மருந்தை உட்கொள்கிறார்.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech

மருத்துவமனையில் பாரதி ஹேமா இல்லாம என்னால இருக்க முடியாது அவளை யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க கூடாது. முன்னாடியெல்லாம் கண்ணம்மா நானிருந்தால் ஹேமாவிடம் பேச தயங்குவார். ஆனா இப்போ ரொம்ப உரிமையா வந்து அவளை கொஞ்சுறா, கோவிலுக்கு கூட்டிட்டு போறா ஏதோ நமக்குத் தெரியாமல் மறைக்கிற மாதிரி இருக்கு என யோசிக்கிறார்.

கண்ணம்மா பாரதி எப்படி போனால் எனக்கென்ன எனக்கு என் பொண்ணு வேண்டும். இப்பவே போய் பாரதியிடம் உண்மைய சொல்லனும் என கிளம்புகிறார். எதிரில் வந்து நின்று ஷாக் கொடுக்கிறார் பாரதி.

பிறகு உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் உள்ளே வரலாமா என கேட்கிறார். உள்ளே அழைத்து அமர வைத்த கண்ணம்மாவிடம் ஹேமாவை என்கிட்ட இருந்து பிரித்து விடாதே. அவ உங்க கிட்டயும் நீ அவகிட்டயும் நெருக்கமா பழகுவதை பார்க்கும் போது எனக்கே பொறாமையா இருக்கு. அவளோட பாசம் எனக்கு மட்டும் கிடைக்கணும் அதனை யாரோடவும் பங்குபோட விரும்பல. தயவு செஞ்சு என் பொண்ண என்கிட்ட விட்டுடு. நீ என்ன விட்டு போன போது வாழலாமா சாகலாமா என இருந்தப்போ என்கிட்ட வந்து சேர்ந்தா ஹேமா. அன்றையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அவ தான் என் உலகம். அவ இல்லாம என்னால இருக்க முடியாது என கூறுகிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா எபிசோட்.

பாரதியின் பேச்சைக் கேட்டு கண்ணம்மா என்ன முடிவு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.