டிசி வாங்கிய பாரதிக்கு கடைசியில் கண்ணம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாரதி டிசி வாங்கிக்கொண்டு வர லட்சுமி மற்றும் ஹேமா என இருவரும் கண்கலங்கி கட்டிப்பிடித்து அழுகின்றனர். இதுக்கப்புறம் இந்த ஸ்கூலுக்கு வர முடியாது பிரண்ட்ஸ பார்க்க முடியாது புது ஸ்கூல்ல எனக்கு பிரண்ட்ஸ் இருக்காங்களான்னு தெரியல நான் யாரு கூட சாப்பிடுவேன் யார் கூட பேசுவேன் யார் கூட விளையாடுவேன் என ஹேமா அழுகிறார். ஹேமாவின் தோழிகள் சிலர் பாரதியிடம் ஹேமா இதே ஸ்கூல்லையே படிக்கட்டுமே ப்ளீஸ் என கெஞ்சுகின்றனர். லட்சுமி டாக்டர் அப்பா பேசின கேட்க ஒரு கட்டத்தில் பாரதி வாங்கிய டிசியை எடுத்து கிழித்து போடுகிறார்.

டிசி வாங்கிய பாரதிக்கு கடைசியில் கண்ணம்மா கொடுத்த ஷாக்... ரூட்டு மாறும் கதைக்களம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு லட்சுமி ஹேமா என இருவரும் சந்தோஷப்படுகின்றனர். உன்னுடைய சந்தோசம் தான் என்னுடைய சந்தோஷம் அதுதான் தலையிட மாட்டேன் என பாரதி ஹேமாவிடம் கூறுகிறார். இந்த பக்கம் ஹாஸ்பிடலுக்கு அமைச்சர் வந்து இறங்க அவரை உள்ளே வரவேற்கின்றனர். இன்னொரு பக்கம் தீவிரவாதிகள் ஹாஸ்பிடலுக்குள் புகுந்துள்ளனர். ‌

பிறகு கண்ணம்மா பாரதியை ஸ்கூலில் சந்தித்து நான்தான் சொன்னதை உங்களால் வேற ஸ்கூல்ல சேர்க்க முடியாது என்று சொல்ல என்ன ஜெயிச்சுட்டேனு திமிர்ல பேசுறியா என்ன பாரதி கேட்க இதுல ஜெயிக்கிறது எல்லாம் இல்ல என்ன நடக்கும்னு எனக்கு தெரியும் பெரிய உங்க மனசு நீங்க கஷ்டப்படுத்தினாலும் குழந்தைங்க மனசை கஷ்டப்படுத்த மாட்டீங்க. அத தெரிஞ்சுக்கிட்டு தான் அப்படி சொன்னேன். ஹேமாவ உங்ககிட்ட இருந்து பிரிக்க நானும் லட்சுமி நினைக்கல நீங்க எங்க கிட்ட இருந்து ஹேமாவ பிரிக்க நினைச்சா முடிவு வேற மாதிரி இருக்கும் என எச்சரிக்கிறார்.

டிசி வாங்கிய பாரதிக்கு கடைசியில் கண்ணம்மா கொடுத்த ஷாக்... ரூட்டு மாறும் கதைக்களம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு நடந்து எல்லாத்தையும் சொல்ல சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

வரும் நாட்களில் அமைச்சர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதால் தீவிரவாதிகள் தாக்குதல் என கதைக்களம் ரூட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.