கண்ணம்மாவை நிரந்தரமாக பிரிய முடிவு எடுத்துள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா குடும்பத்தினர் எல்லோரும் சென்னைக்கு கிளம்பி கொண்டிருக்க அப்போது பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்து கண்ணம்மா என கூப்பிட குழந்தைகளுடன் கண்ணம்மா வெளியே வருகிறார்.

பாரதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என சொல்ல இன்னும் பேசுறதுக்கு என்ன இருக்கு? உங்களுக்கு நினைவுகளை மீட்டுக் கொண்டு வர உதவி பண்ணனும்னு சொன்னாங்க அதையும் பண்ணிட்டேன் வேற என்ன இருக்கு என கேட்க பாரதி நன்றி சொல்லணும் என கூறுகிறார். நினைவுகளை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நீ என்னுடைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்க அதுக்காக மிகப்பெரிய நன்றி, இந்த உதவிய என் வாழ்நாள் முழுக்கவும் மறக்க மாட்டேன் என சொல்கிறார்.

மேலும் உன்னுடைய மனச மாத்தி உன்ன சென்னைக்கு கூட்டிட்டு வருவேன்னு சவால் விட்டு தான் இந்த ஊருக்கு வந்தேன். அதுக்காக நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் எதுவும் பண்ண முடியல நான் தோத்து போயிட்டேன் என கூறுகிறார். இனிமே எந்த விதத்திலும் உன்ன நான் தொந்தரவு பண்ண மாட்டேன், நீ உன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமா வாழலாம். நான் வெளிநாடு போகிறேன் என சொல்கிறார். குழந்தைகள் இருவரும் வேண்டாம் எங்க கூடவே இருங்க என சொல்ல பாரதி அம்மாவோட நீங்க சந்தோஷமா இருக்கணும் அம்மா பேச்சை கேட்டு நடக்கணும் சண்டை போடக்கூடாது என அறிவுரை கூறுகிறார்.

பிறகு பாரதி கிளம்புவதாக சொன்ன குழந்தைகள் நாங்களும் உங்களோட வரும் உங்கள ஏர்போர்ட்ல பிளைட்ல அனுப்பி வச்சிட்டு நாங்க அம்மாகிட்ட வந்துரும் என சொல்ல பாரதி குழந்தைகள் கூட்டிட்டு போக அனுமதி கேட்க கண்ணம்மா சரியென சொல்கிறார். பிறகு குழந்தைகளுடன் பாரதி கிளம்பிச் செல்ல கண்ணம்மா ஒரு நிமிஷம் என சொல்லி தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறார். சௌந்தர்யா நான் எதுவும் பேச முடியாது. எதுவும் பேச கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டான். இப்போ நான் ஒரு உயிருள்ள பிணமா தான் இங்கே நின்னுகிட்டு இருக்கேன் என கூறுகிறார்.

அடுத்து கணபதி கண்ணம்மா உனக்கு கொடுக்கிறதுக்கு என்கிட்ட இந்த போட்டோவை தவிர வேற எதுவும் இல்லை என சொல்லி சில போட்டோக்களை கொடுக்கிறார். பிறகு ஊர் மக்கள் வர பாரதி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

அடுத்து உள்ளே வரும் கண்ணம்மா கட்டிலில் அமர்ந்து போட்டோக்களை பார்த்து கண் கலங்கி கண்ணம்மா தாமரை வந்ததும் கண்களை துடைத்துக் கொள்ள தாமரை நீ எதுக்கு புள்ள அழுகுற நீ சந்தோஷமா தானே இருக்கணும் நீ நெனச்சது நடந்துடுச்சு மதியத்துக்கு முந்திரி திராட்சை எல்லாம் போட்டு பாயாசம் காய்ச்சவா என சொல்கிறார்.

மேலும் உனக்கு ஈகோ அதனால தானே இப்படி பண்ற. பாரதி செய்வது தப்பு தான் நான் இல்லன்னு சொல்லல. ஆனா செய்த தவற உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்கணும். மன்னிச்சு அன்பு காட்டுறது நாலதான் இந்த உலகம் இயங்குது எல்லோரும் மன்னிக்க மாட்டேன் என்று இருந்தால் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கிட்டு சாக வேண்டியது தான் என சொல்கிறார்.

அம்மா மாதிரி மாமியார், அன்பு காட்டுற புருஷன், தம்பி மாதிரி கொழுந்தன் என எல்லாத்தையும் விட்டுட்டு என்ன பண்ண போற என சொல்ல கண்ணம்மா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.