பாரதியால் ஊர் மக்களுக்கு எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்து நீ சாப்பிடும் வரை நானும் சாப்பிட மாட்டேன் என சொல்ல பாரதி எனக்கு ஒன்றும் ஆகாது நீங்க சாப்பிடுங்க என அகிலனை வைத்து அம்மாவை சாப்பிட வைக்கிறார்.

பாரதியால் ஊர் மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. சௌந்தர்யா கொடுத்த ஷாக் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு பாரதி தனியாக உட்கார்ந்திருக்க அப்போது லட்சுமி வெளியே வந்து சைக்கிள் பாரதியிடம் பேச முயற்சி செய்ய கண்ணம்மா உள்ள போ என உள்ளே அனுப்பி கதவை சாத்தி விடுகிறார். அதன் பிறகு பாரதி ஒரு மாதிரியாக இருக்கு என படுக்க அவருடைய உடல்நிலை மோசமடைய பதறிப் போகும் கணேசன் கண்ணம்மா வீட்டுக்கு ஓடி வந்து கதவைத் தட்டி சக்கரை தண்ணி கேட்க தாமரை சக்கரை தண்ணி எடுத்துச் சென்று பாரதிக்கு கொடுக்க பாரதி அதை தட்டி விடுகிறார்.

இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வரவரைக்கும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் என உறுதியாக சொல்லிவிடுகிறார். மறுநாள் காலையில் கோவிலை எங்க ஊர் தலைவர்கள் உட்பட சில உக்காந்து கொண்டு பாரதிக்கு உடம்பு முடியாமல் டவுன் ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு போய் சேர்க்கப் போறாங்க. 15 வருடமா நடக்காதது இந்த பாரதியால் நடந்திடுமா என்ன? என பேசிக்கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் அமைச்சர் உட்பட எல்லோரும் ஊருக்கு வந்து சிஎம் இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் கட்ட ஒத்துக்கிட்டாரு என சொல்லி அதற்கான ஆர்டரை ஊர் மக்களிடம் கொடுக்கின்றனர். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

பாரதியால் ஊர் மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. சௌந்தர்யா கொடுத்த ஷாக் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கணேசன் எல்லோரிடமும் இந்த ஊருக்காக நீங்க 15 வருஷமா ஹாஸ்பிடல் வேணும்னு போராடிட்டு இருக்கீங்க உங்களால முடியாதது பாரதி செஞ்சு காமிச்சுட்டாரு அவருக்கு நீங்க நன்றி சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இப்படி ஊர விட்டு போக சொல்லாதீங்க என சொல்லிக் கொண்டிருக்க யாரும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.