ஆதாரத்தோடு வெண்பா பற்றிய உண்மையை போட்டு உடைத்துள்ளார் அஞ்சலி.

Bharathi Kannamma Episode Update 26.11.21 : தமிழ் சின்னத்திரையில் இதை டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி கோர்ட் தீர்ப்பை நினைத்து என்ன முடிவு எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களுடைய மனசாட்சி தோன்றி அந்த கண்ணம்மா கூட சேர்ந்து வாழப் போறீயா? என கேட்க நோ வே என கூறுகிறார். இன்னொரு பக்கம் பின்னர் மனசாட்சி இது கோர்ட்டு தீர்ப்பு நீ பின்பற்றி தான் ஆகணும், இல்ல நா ஜெயிலுக்குப் போக ரெடியா என கேட்க அதற்கும் நோ வே என சொல்கிறார். கடைசியில் பாரதி என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழம்பிக் கொண்டே இருக்கிறார்.

பேட்மிண்டன் கெத்து : ஸ்ரீகாந்த்-சிந்து, தொடர்ந்து செம எனர்ஜி..பலே பாய்ச்சல்..

ஆதாரத்தோடு வெண்பா பற்றிய உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி.. அதிர்ச்சியில் பாரதி எடுத்த சூப்பர் முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கண்ணம்மா லஷ்மி கேட்டதற்காக குலோப் ஜாமுன் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆட்டோ டிரைவரான வந்து வரவேண்டிய பணம் எல்லாமே வந்துடுச்சு என கண்ணம்மாவிடம் பணத்தை கொடுக்கிறார். உனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று நினைக்கிறேன். உன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரியுது சொல்கிறார். எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டேன். இனி வாழ்க்கை போற போக்குல வாழவேண்டுமே மனசை தேற்றிக் கொண்டேன் என கண்ணம்மா கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி அமர்ந்து கொண்டிருக்க அப்போது அகில் மற்றும் அஞ்சலி வந்து உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என கூறுகின்றனர். உயிரே போய் இருக்க வேண்டிய விஷயம் என கூறுகின்றனர். அதன் பிறகு அஞ்சலி தனக்கு கர்ப்பமான பிறகு ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் பிறகு அது வெண்பாவுக்கு தெரிய அவர் பாரதி பெயரில் மருந்துகளை பரிந்துரை செய்ததை கூறுகிறார். அந்த பேப்பரை பார்த்து கண்ணம்மா இது உங்களோட கையெழுத்து இல்லை எனக் கூறி அதைக் கிழித்துப் போட்டு விட்டார். அது அகிலனுக்கு அனுப்பிய போட்டோ இருக்கும் என அதை காட்டுகிறார். இது என்னோட கையெழுத்து தான் ஆனால் நான் எழுதல என பாரதி கூறுகிறார். அதன் பிறகு அஞ்சலி அதை தான் நானும் சொல்கிறேன் என கூறுகிறார். பிறகு இதை மாத்திரை என்னன்னு கொஞ்சம் பாரு என கூறுகிறார். அதனை பார்த்த பாரதிக்கு மேலும் ஷாக். அது பிரச்சினையை பெரிதாக்கி உயிரையே பறிக்கும் மாத்திரை என கூறுகிறார். வெண்பா எப்படிப்பட்டவர்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க. அவளுக்கும் எனக்கும் பெருசா எந்த சம்பந்தமும் இல்லை எனக்கு அவ இப்படி ஒரு துரோகம் செய்திருக்கிறார். நீங்க அவளோட ரொம்ப க்ளோஸா இருக்கீங்க பார்த்து நடந்துகோங்க என கூறுகிறார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம்

ஆதாரத்தோடு வெண்பா பற்றிய உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி.. அதிர்ச்சியில் பாரதி எடுத்த சூப்பர் முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன்பிறகு பாரதி ரூமுக்குச் சென்று வெண்பா இப்படி கீழ்த்தரமாக நடந்துப்பானு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. கண்ணம்மா எனக்கு ஒரு துரோகி என இப்போ வெண்பா புது துரோகி. ரெண்டு பேருமே என் முதுகுல குத்திட்டாங்க. இனிமே யாரையும் நம்பரதா இல்ல என முடிவு செய்கிறார். மேலும் கோர்ட் தீர்ப்பு படி தன் அம்மாவுடன் ஆறுமாதம் பல்லைக் கடித்துக் கொண்டு வாழ்ந்து விட்டு விவாகரத்து வாங்கிவிட வேண்டுமென முடிவு செய்கிறார்.

ஆனால் இந்த வீட்டிற்கு கண்ணம்மாவை கூட்டி வர கூடாது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவளோடு சேர்ந்து செய்யும் அரட்டைகளை பார்த்து பார்த்து எனக்கு ரத்தம் கொதிக்கும். அவளோட வீட்டுக்கு போவதற்கு தான் சரி என முடிவெடுத்து அதனை வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். இதனைக் கேட்டு சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் பாரதிகண்ணம்மா எபிசோட் முடிகிறது.

மேலும் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ ஒன்றில் கண்ணம்மாவை இந்த வீட்டுக்கு கூப்பிட போவதில்லை. நான் தான் அவளோட வீட்டுக்கு போகப்போகிறேன் என கூறுகிறார்.